உங்க தங்க நகை அடமானம் செல்லாமல் இருக்க, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், கண்ணாடியை இப்படி பயன்படுத்தினால் போதும், அதன் பிறகு நகை அடமானம் செல்ல வாய்ப்பே இல்லை.

- Advertisement -

இந்த தங்க நகைகளின் அருமையானது நகை அதிகம் வைத்திருப்பவர்களை விட, ஒரே ஒரு குண்டுமணி தங்கத்திற்காக பாடுபட்டு சேர்ப்பவர்கள் தான் இதன் அருமை அதிகமாகவே புரியும். ஆனால் அந்த நகையும் இவர்களிடம் தான் தங்காமல் அடிக்கடி அடமானத்திற்கு சென்று கொண்டே இருக்கும். தங்கமானது சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாக மட்டுமே  பயன்படுகிறது. தங்கம் வாங்கும் போது என்னவோ அணிய ஆசைப்பட்டு தான் வாங்குவோம், ஆனால் பாதி நேரம் அது அடகு கடையிலே தான் இருக்கும். இன்னும் சிலருக்கு நகை வாங்கும் யோகம் இருக்குமே தவிர, அதை அணியும் போதும் இருக்கவே செய்யாது. எப்போது பார்த்தாலும் நகை அடமானத்தில் இருக்கும். ஆசைப்பட்டு வாங்கிய நகைகளை இனி அடிக்கடி அடகு வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போக செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பரிகாரத்திற்காக நீங்கள் எந்த ஒரு செலவும் செய்ய வேண்டியதில்லை, நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இந்த பரிகாரத்தை நகை அடமானத்தில் இருந்து மீட்டு வந்த உடன் செய்து விடுங்கள். அதன் பிறகு எந்த காரணத்தை கொண்டும் உங்கள் நகை அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரு கண்ணாடி ஒரு வெற்றிலை இது மட்டும் தான்.

- Advertisement -

கண்ணாடியை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆன்மீகம் சார்ந்த பல தகவல் உள்ளது. இந்த கண்ணாடிக்கு அத்தனை தெய்வீக ஆற்றல் உண்டு ஆகையால் தான் பூஜையறையிலும் கூட சாமி படங்களுக்கு நிகராக இந்த கண்ணாடியை வைக்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. கோவில்களில் கூட சுவாமிக்கு அலங்காரம் முடிந்தவுடன் கடவுளையும் கண்ணாடியில் காட்டும் பழக்கம் உண்டு. அத்தகைய தெய்வீக சக்தி கொண்ட இந்த கண்ணாடி வீட்டில் ஐஸ்வரியம் நிறைந்திருக்கவும் பயன்படுத்தலாம். இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நகை அடகு போகாமல் இருக்க பரிகாரம் | Nagai Adagu Pogamal iruka Pariharam
நீங்கள் அடகில் இருந்து மீட்டு வந்த தங்க நகையை முதலில் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு அலசி எடுத்த பிறகு மஞ்சள் கலந்த தண்ணீரிலும், இந்த நகையை போட்டு எடுத்து விட்டு நகையை ஈரம் இல்லாமல் சுத்தமான துணி வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து (இதற்கு பயன்படுத்தும் கண்ணாடி ஓவல் சைஸில் இருக்க வேண்டும் சதுரமாக இருக்கும் கண்ணாடி பயன்படுத்தக் கூடாது). அந்த கண்ணாடியின் மேல் நீங்கள் மீட்டு வந்த நகை வைத்து வெற்றிலையை போட்டு மூடி விடுங்கள். வெற்றிலை இல்லை என்றால் வாழை இலை பயன்படுத்தலாம். இது ஒரு நாள் முழுவதும் பூஜையறையில் அப்படியே மூடி வைத்து விடுங்கள். ((நகை வெளியே இருப்பதால் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்)

- Advertisement -

அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து கடவுளிடம் இந்த நகை மறுபடியும் அடமானம் செல்லாமல் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொண்டு, கண்ணாடியில் இருந்து நகையை எடுத்து நீங்கள் அணிந்து கொள்வதாக இருந்தால் அணிந்து கொள்ளலாம், அல்லது பீரோவில் வாய்ப்பதாக இருந்தாலும் வைக்கலாம்.

இதையும் படிக்கலாம்: இந்த குணம் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாறவே முடியாது. செல்வந்தராகக் கூடிய தகுதியை பெறுபவர்கள் யார் யார்?

இப்படி செய்யும் போது இந்த நகை உங்களை விட்டு செல்லாமல் உங்களுடன் தங்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய நகையை எப்போதும் சந்தோஷமாக அணிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -