இந்த குணம் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாறவே முடியாது. செல்வந்தராகக் கூடிய தகுதியை பெறுபவர்கள் யார் யார்?

cash
- Advertisement -

என்னிடம் பேங்கில் கோடிக்கணக்கில் பணம் இல்லை. நான் வாழ்வதற்கு பெரிய பங்களா இல்லை. என்னிடம் வாசலில் நிற்க வைக்க பெரிய பெரிய கார்கள் இல்லை. விலை உயர்ந்த தங்கமும் வைடூரியமும் இல்லை. நான் செல்வந்தன் இல்லை. நான் பணக்காரன் இல்லை என்று நாமே நினைத்துக் கொள்கின்றோம். அப்போ நீ பணக்காரன் இல்லை என்பதை நீயே நம்புகிறாய் அப்படித்தானே. நான் பணக்காரன் இல்லை, நான் பணக்காரன் இல்லை என்ற எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து வாழ்ந்து கொண்டிருந்தால் இந்த பிரபஞ்சம்  நமக்கு செல்வத்தை கொடுக்குமா. எதையுமே கொடுக்காது. இல்லை இல்லை என்று நினைக்கும் உங்களுடைய எண்ணம் இல்லாமல் தான் போகும்.

நாம் எதை வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமோ, அதை இன்பமாக நினைத்து, அதை பெரிய செல்வமாக பாவித்து, மன நிறைவோடு சந்தோஷத்தோடு வாழ்பவர்கள் தான் உண்மையாகவே செல்வந்தர்கள். இருப்பதை வைத்து சந்தோஷப்படுபவர்கள், மேலும் மேலும் நிச்சயமாக செல்வந்தர்கள் ஆக்கப்படுவார்கள். இல்லாததை நினைத்து, இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பார்கள். இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.

- Advertisement -

நாம் மகிழ்ச்சியாக இருப்பதை வைத்து மனநிறைவு அடையும் போது கிடைக்கக்கூடிய சந்தோஷம், இல்லாததை நினைத்து ஏங்கும்போது நிச்சயமாக நமக்கு கிடைக்காது. (இல்லாததை நினைத்துக் கொண்டு, இன்று தங்களிடம் இருப்பதைப் பற்றி யாருமே சிந்தித்துப் பார்ப்பதில்லை.) இது சில பேருக்கு புரியும். சில பேருக்கு புரியாது. இருப்பினும் சந்தோஷமாக செல்வந்தராக நிம்மதியாக வாழ்வதற்கு மேல் சொன்ன படி இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்ற தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

என்னதான் வாழ்க்கையின் செல்வ செழிப்பதற்காக நாம் மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலும், மனிதர்களுடைய மனம் ஒரு பரிகாரத்தை செய்யும் போது தான் திருப்தி அடைகிறது. இந்த பரிகாரத்தை செய்துவிட்டு நமக்கு நல்லது நடக்கும். நமக்கு பணம் வரும், நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை குறையும் என்று நம்முடைய மனம் ஆழமாக நம்புகிறது. இப்படி நம்பிக்கையோடு நாம் ஒரு பரிகாரத்தை செய்யும் போதும்,  நமக்கு கை மேல் பலனை கொடுக்கும். அந்த வரிசையில் செல்வந்தர் ஆவதற்கு செய்யக்கூடிய ஒரு ஆன்மீக தகவல் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

செல்வந்தர்களாக பரிகாரம் – Selvandhargalaga pariharam
வெள்ளிக்கிழமை தோறும் உங்களால் முடிந்த அளவுக்கு பசியால் கஷ்டப்படுபவர்களுக்கு மதிய நேரத்தில் தயிர் சாதம் வாங்கி தானம் கொடுக்க வேண்டும். கூடவே குடிப்பதற்கு தண்ணீரும் தானம் கொடுக்கலாம். மதிய நேரம் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து தான் இந்த தானத்தை செய்ய வேண்டும். போன போக்கில் யாருக்காவது தானம் கொடுப்பதன் மூலம் நமக்கு பலன் கிட்டாது.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் சனிக்கிழமை இதை செய்தால் அந்த பெருமாளே நேரில் வந்து உங்கள் கடனை எல்லாம் அடைத்து விடுவார்.

இன்று பராமரிக்கப்படாத ஆசிரமங்கள் முதியோர் இல்லங்கள் என்று எத்தனையோ இருக்கிறது? அதில் ஏதாவது ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு உள்ள ஆதரவு அற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை தயிர் சாதம் அன்னதானமாக கொடுப்பது நம்முடைய பண பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்கும். உங்களால் முடிந்ததை செய்யுங்கள் ஒருவர் பசியை ஆற்ற 20 ரூபாய்க்கு தயிர் சாதம் வாங்கி கொடுத்தாலும் அது உங்களுக்கு பலன் தரக்கூடிய விஷயம்தான். நமக்கு மேலும் மேலும் பணம் வருவதற்கு உண்டான வாய்ப்புகளை இந்த சின்ன பரிகாரம் தேடி தரும் இந்த கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -