உங்க தங்க நகை அடகு மீண்டும் மீண்டும் கடைக்கு செல்லாமல் இருக்க, இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்த பிறகு நகை எடுத்து வைத்து விடுங்கள். உங்க நகை உங்களை விட்டு செல்லவே செல்லாது.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பொட்டு தங்கம் சேர்க்கவே வெறும் பாடுபட வேண்டியது இருக்கிறது. தங்கத்தின் விலை அவ்வளவு ஏறிக் கொண்டே செல்கிறது. இப்படியான இந்த சூழ்நிலையில் நாம் ஆசையாய் வாங்கி வந்த நகையை பயன்படுத்த முடியாமல் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக அடிக்கடி அடகு கடைக்கு சென்று கொண்டிருந்தால் என்ன செய்வது. இப்படியான பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள். ஒரு முறை உங்களிடம் வந்த நகை மீண்டும் அடகு கடைக்கு செல்லாது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இன்று ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்க நகை அடமானம் செல்லாமல் இருக்க பரிகாரம்:
அடகு வைத்த நகையை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் முதலில் நல்ல சுத்தமான தண்ணீரில் நகை கழுவி எடுத்து விடுங்கள். அதன் பிறகு இன்னொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் கல்லுப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்த பிறகு அந்த தண்ணீரில் நீங்கள் சுத்தம் செய்த நகையை போட்டு இந்த பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த நகையை வைத்து நாம் சின்னதாக ஒரு பூஜை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் நகையை திருப்பி வந்த நாள் எதுவாக இருந்தாலும் சரி, அந்த நாளில் குரு ஓரை இருக்கும் நேரத்தை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதை நேரத்தை காலண்டரில் பார்த்தாலே கிரக ஓலை நேரம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.

நீங்கள் பூஜை செய்யும் அந்த நாளில் குரு ஓரை எப்போது இருக்கிறதோ அந்த நேரத்தில் இந்த மஞ்சள் உப்பு கலந்து தண்ணீரை இருக்கும் பாத்திரத்தை வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து இரண்டு நெய் தீபம் ஏற்றிய பிறகு, இந்த நகை என்னிடமே இருக்க வேண்டும் மீண்டும் அடமானத்திற்கு செல்லக் கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அந்த தண்ணீரில் இருந்து நகையை எடுத்து ஒரு சுத்தமான துணி வைத்து துடைத்து விடுங்கள். துணி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படம் அல்லது விக்ரகம் அவற்றின் மீது படும் படி நகையை போட்டு விடுங்கள். சிறுது நேரம் கழித்து அந்த நகையை மறுபடியும் எடுத்து நீங்கள் அணிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் பீரோவில் எடுத்து வைப்பதாக இருந்தாலும் வைத்து விடலாம்.

இந்த பரிகாரத்தை செய்யும் போதும் நகை பூஜை அறையில் வைக்கும் போதும் அல்லது சுவாமிக்கு சிறிது நேரம் போட்டு வைத்திருக்கும் போதும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு சின்ன பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்து விட்டால் போதும். ஒரு முறை அடமானத்திலிருந்து திரும்பி வந்த உங்கள் நகை மறுபடியும் அடமானத்திற்கு செல்லவே செல்லாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மகாலட்சுமி தங்க நிலை வாசல் சொல்லும் ரகசியம் என்ன? நிலை வாசலில் தவறியும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! வந்த மகாலட்சுமி திரும்பி சென்று விடுவாள்.

காலம் முழுதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகை நம்முடனே எப்போதும் இருக்க இது போன்ற ஒரு சில தாந்திரீக பரிகாரங்களை செய்து கொள்ளலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் இனி நகையை மீட்டவுடன் மறக்காமல் இது போல செய்து எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -