இவர்களுடைய கையால் தங்க நகைகளை அடமானத்தில் வைத்தால், அந்த நகையை ஆயுசுக்கும் மீட்க முடியாது. மிஸ் பண்ணாம அது எந்த கை என்று நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

gold

சில பேருடைய கைகளுக்கு ராசி என்ற ஒன்று கட்டாயம் உண்டு. சிலபேர் கையினால் மண்ணை தொட்டாலும் பொன்னா மாறி விடும். சிலபேர் கைராசி பொன்னை தொட்டாலும் மண்ணாக மாறும். இதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஆனால், நிச்சயமாக அதிர்ஷ்டசாலிகள், துரதிர்ஷ்டசாலிகள் என்று அவரவர் முன்ஜென்ம கர்ம வினைகளை பொறுத்து, அவரவர் ஜாதக கட்டத்தில் நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். இதனடிப்படையில் கடனுக்காக அடமானம் வைக்க, தங்க நகைகளை யார் கையால் அடமானம் வைக்க கூடாது என்று ஜோதிடம் சொல்கிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

யாருடைய ஜாதகக் கட்டத்தில் ராகு திசை ஆனது நடந்து கொண்டிருக்கின்றதோ, அவர்கள் தங்களுடைய நகையை அடமானம் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராகு தசை நடத்துக் கொண்டிருக்கும் போது ஒருவருக்கு நகை ஆனது அடமானம் போனால் 98% அந்த நகை திரும்பவும் மீட்க்க முடியாமல் போய்விடும். அடமானத்திற்கு பதிலாக உங்களுக்கு கஷ்டம் என்று வந்தால், நஷ்ட படுவதற்கு முன்பு அந்த நகையை விற்று விடுங்கள்.

அப்படி இல்லை என்றால், அந்த நகையை உங்கள் கைகளால் உங்கள் பேரை கொண்டு அடமானம் வைக்க கூடாது. வேறு யார் கையிலாவது நகையை கொடுத்து, அடமானம் வைத்து அந்த பணத்தை வாங்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படியும் ஒரு வழி உள்ளது.

rahu-ketu

அடுத்தபடியாக பூரட்டாதி நட்சத்திர காரர்களாக இருந்தால் அவர்களுடைய கைகளால் நகையை அடமானம் வைக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதேபோல் உங்களிடம் யாராவது வந்து நகையை அடமானம் வைப்பதற்காக உதவியாக கேட்கிறார்கள்! அவர்களுடைய பிறந்த நாள் நட்சத்திரம் திதி எல்லாம் நம் பார்க்காமல் கொடுத்து விட்டோம் என்றால், நிச்சயமாக அந்த நபர் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களாக இருந்தால் நீங்கள் கொடுத்த நகை திரும்பி வராது.

- Advertisement -

பூரட்டாதி நட்சத்திரத்தை கொண்டவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்களுடைய நேரம், அவர்கள் கையால் நகையை அடமானம் வைத்தால் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக அதை மீட்க முடியாத சூழ் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். அவ்வளவு தான். பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் ஆக இருந்தால், உங்களது நகையை வேறு யாராவது கையில் கொடுத்து அவர்களை அடமானம் வைக்கச் சொல்லுங்கள்.

sukkiran

நீங்கள் தங்க நகைகளை புதியதாக வாங்கினால் வெள்ளை காட்டன் துணியில் வைத்து, அதில் மூன்று மல்லிகைப் பூக்களை வைத்து முடிச்சு போட்டு, கல் உப்பின் மேல் வைத்து அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் சுவாமியின் படத்திற்கு அணிவித்து நீங்கள் அணிந்து கொண்டால் நகைகள் உங்களை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே லட்சுமி சொரூபமாக இருக்கும். வெள்ளை நிற துணி மல்லிகைப்பூ கல்லுப்பு இது மூன்றுமே சுக்கிரனின் அம்சம் பொருந்தியது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, உங்களை முன்னேற விடாமல் தடுக்கிறதா? உங்களுடைய மனது தெளிவுபெற 1 டம்ளர் இந்த தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.