- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநகை கடனை அடைக்க பரிகாரம்

நகை கடனை அடைக்க பரிகாரம்

- Advertisement -

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம். அந்த அம்மனுக்குரிய மாதத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அப்படி வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருகிறது. அதனால் நாம் செய்யும் வேண்டுதலக்குரிய பலனை விட அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய பலனானது இரட்டிப்பு பலனாக கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய அடகு நகையை திருப்புவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நகை கடனை அடைக்க பரிகாரம்

ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு சந்தோஷம் என்பது தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பொறுத்துக் கூட உண்டு. வெளியில் செல்லும் பொழுது கௌரவமாக தம்மை நடத்த வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து நகைகளை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படி இருந்தும் திடீரென்று ஏதாவது ஒரு அவசரமான சூழ்நிலையில் சேர்த்து வைத்திருந்த நகையை அடகு வைக்கவும் செய்வார்கள். இப்படி அடகில் வைத்த நகையை திருப்புவதற்கு பல வழிமுறைகளையும் பின்பற்றுவார்கள். பலரால் அந்த அடகில் வைத்த நகையை திருப்ப முடியும். ஒரு சிலருக்கு அதை திருப்ப முடியாத சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் விரைவிலேயே தீர்த்துவிடும்.

நகையில் தோஷம் இருந்தாலோ அல்லது நமக்கு சொர்ண தோஷம் ஏற்பட்டு இருந்தாலும் நாம் வைத்திருக்கும் நகைகள் நம்மிடம் தங்காமல் அடகு கடைக்கு சென்று விடும். அதை திருப்ப முயற்சி செய்தாலும் திருப்பியவுடன் மறுபடியும் சென்றுவிடும் அல்லது திருப்பாமலேயே போய்விடும். இப்படி நமக்கு இருக்கக்கூடிய சுவர்ண தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அடகில் வைத்த நகையை திருப்புவதற்கு ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். நம் வீட்டில் நம்மிடம் இருக்கக்கூடிய தொகையை மகாலட்சுமி தாயாரின் முன்பாக வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த தொகையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய நகைக்கடைக்கு சென்று தங்களால் இயன்ற ஒரு குண்டுமணி அளவாவது தங்கத்தை அன்றைய தினம் வாங்க வேண்டும். வாங்கி வந்த தங்கத்தை மறுபடியும் பூஜை அறையில் வைத்து அதில் புனுகை தடவி எங்களிடம் தங்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது, எங்களிடம் தங்கம் நிலையாக இருந்து கொண்டே இருக்கிறது, எங்களிடம் தங்கம் நிறைவாக இருந்து கொண்டே இருக்கிறது என்று மனதார சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியான வரலட்சுமி விரதத்தன்று நம் தங்கத்தை வாங்கி வைத்து மனதார இந்த வார்த்தைகளை கூறும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய சுவர்ண தோஷமும் நகையில் இருக்கக்கூடிய தோஷமும் படிப்படியாக விலகி விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் வீடு வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:பிரச்சினைகள் தீர்க்கும் வரலட்சுமி விரத பரிகாரம்
சொர்ண ஆகர்ஷன பைரவரையும், மகாலட்சுமி தாயாரையும், குபேர பகவானையும் நினைத்து வரலட்சுமி பூஜை அன்று இந்த முறையில் தங்கத்தை வைத்து நாம் பரிகாரம் செய்ய நம்முடைய வாழ்க்கையில் தங்கத்திற்கு எந்த வித குறையும் இல்லாமல் இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்