இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் என்பது இருக்கும், சங்கடங்கள் என்பதும் இருக்கும். இந்த சங்கடங்களை தீர்ப்பதற்கும் பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பல வழிமுறைகளை பின்பற்றி இருந்தாலும் பரிகாரங்கள், வழிபாடுகள் என்னும் முறையிலும் பலரும் முயற்சி செய்வார்கள். அப்படி செய்யக்கூடிய முயற்சிகளில் ஒன்றாக தான் வரலட்சுமி விரதத்தன்று நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் திகழ்கின்றன. மிகவும் எளிமையான பரிகாரங்களை எந்தெந்த பிரச்சினைகள் தீர்வதற்காக செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைகள் தீர்க்கும் வரலட்சுமி விரத பரிகாரம்
வரலட்சுமி விரதம் என்பது அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு வழிப்பாடாக திகழ்கிறது. அதிலும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் அவர்களுடைய வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக ஏற்படுவதோடு குடும்ப வளம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வரலட்சுமி பூஜை செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் கூட வரலட்சுமி விரதத்தை இருந்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய சில எளிமையான பரிகாரங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளை தீர்க்கும் என்றும் அந்தப் பிரச்சினைகள் தீர்வதற்குரிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கடன் ரீதியான பிரச்சினைகளால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம், எவ்வளவு முயற்சி செய்தாலும் கடனை அடைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் வரலட்சுமி விரத தினத்தன்று அம்மனுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வரலட்சுமி விரதம் செய்யாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபாடு செய்ய அவர்களுடைய கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீரும் என்று கூறப்படுகிறது.
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரலட்சுமி விரத தினத்தன்று வயதான தம்பதிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். இப்படி ஆசிர்வாதம் வாங்குவதன் மூலம் அவர்களுடைய தொழில் ரீதியான, வேலை தொடர்பான அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும்.
குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவாக இருக்கிறது, கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லை, உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்று குடும்பத்தில் இருக்கக்கூடிய உறவினர்களிடையே சண்டைகள் ஏற்படும் பட்சத்தில் அந்த சண்டைகளை தீர்ப்பதற்கு வரலட்சுமி விரத தினத்தன்று திருநங்கைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் ஆகியும் திருமணம் நடைபெறவில்லை எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் வரலட்சுமி விரத தினத்தன்று அருகில் இருக்கக்கூடிய ஒரு வாழை மரத்திற்கு சுத்தமான பசும்பாலை ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களுடைய திருமணத்தடை முற்றிலும் விலகும். இந்த பரிகாரத்தை சம்பந்தப்பட்ட நபர் செய்யலாம் அல்லது அவர்களை பெற்ற தாய் செய்யலாம்.
அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றிகள் அடைந்து சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் வரலட்சுமி விரத தினத்தன்று 11 ஏழை சுமங்கலிகளுக்கு வயிறார சாப்பாடு வாங்கித் தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:காரிய சித்தி ஏற்பட விநாயகர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரங்களை அவரவர்களுடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு செய்து வரலட்சுமி விரதத்தன்று செய்து முழு பலனையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.