நாகராஜ ஸ்லோகம்

naga-worship-compressed
- Advertisement -

“பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி”. அப்படி பட்ட பாம்புகள் தான் இந்து, புத்த மதங்களில் தெய்வீக தன்மை வாய்ந்த ஒரு விலங்காக கருதி வழிபட படுகின்றன. பாம்புகள் நமது வழிபாடு மற்றும் வாழ்வியலில் முக்கிய இடம் பெறுகிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது சிலருக்கு முற்பிறவியிலும், இப்பிறவியிலும் நாகப்பாம்புகளை தீண்டிய, கொன்ற பாவங்களினால் நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. நவகிரகங்களில் பாம்பின் தோற்றத்தை கொண்ட ராகு – கேது போன்ற கிரகங்களின் தோஷமும் சிலருக்கு ஏற்படுகிறது. இவை எல்லாவற்றையும் போக்ககூடியது தான் இந்த நாகராஜ ஸ்லோகம்.

நாகராஜ ஸ்லோகம்

ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்:
தட்சகம் காளியம் ததா
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
நாகராஜ துதி

- Advertisement -

நாக தேவர்களை போற்றி இயற்றப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அருகில் பாம்பு புற்றிருக்கும் கோவிலுக்கு சென்று, புற்றிற்கு பால் ஊற்றி, நெய் தீபம் ஏற்றி இந்த ஸ்லோகத்தை 108 முறை துதித்து வந்தால், நாக தோஷம், சர்ப்ப தோஷம், ராகு – கேது கிரகங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

naga

“அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக தேவர்களை வணங்குகிறேன். எனக்கு ஏற்பட்டிருக்கும் ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள வேண்டும்” என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருளாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை முழுமனதுடன் நாக தேவர்களை வணங்கி கூறி வருவதால் நாக – சர்ப்ப தோஷங்கள், ராகு – கேது கிரக தோஷங்கள் முற்றிலும் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தட்சிணாமூர்த்தி துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nagaraja slokam in Tamil. It is also called as Nagaraja slogam in Tamil or Nagaraja manthiram or Nagaraja mantra in Tamil.

- Advertisement -