இந்த சத்தம் உங்கள் காதில் விழுந்தால் தாமதிக்காமல் உடனே இதை செய்து விடுங்கள். நமக்கு வரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நம் சாஸ்திரத்தில் ஒலிகளை இரண்டு விதமாக பிரித்து பார்க்கிறோம் ஒன்று மங்கள ஒலி மற்றொன்று அமங்கல ஒலி. அதே போல் சத்ததிலும் இரண்டு வகையாக தான் பார்க்கிறோம். சில வகை சத்தங்கள் நம் காதில் கேட்கும் போது நல்ல சகுனமாகவும், சில சத்தங்கள் கேட்டால் அபசகுணங்களாகவும் பார்க்கின்றோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த நாம் காதில் கேட்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒரு சத்தத்தை நாம் கேட்கும் போது மனதிற்கு இதமாக இருந்தால் அது மங்கள ஒலி என்று அர்த்தமாக கொள்ளலாம். சில ஒலிகளை கேட்கும் போது மனதிற்குள் ஒரு வித படப்படப்பு, பயம், இனம், புரியாத கவலை எல்லாம் தோன்றும். இந்த ஒலி நம் காதுகளில் விழுவது அவ்வளவு நல்ல சகுனங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியான ஒரு சத்தம் தான் இந்த நாய் ஊளையிடுவது.

- Advertisement -

நாய்கள் அழுவதை தான் ஊளை இடுவது என்று நாம் சொல்கிறோம். நாய்கள் மிகவும் நன்றி உள்ள நல்ல ஜீவன்கள். அதனால் தான் மற்ற ஜீவராசிகளை விட இந்த ஜீவனை அனைவரும் வீட்டில் வளர்க்க பிரியப்படுகிறார்கள். அது மட்டும் இன்றி நாயானது பைரவரின் வாகனம். ஆகையால் இவைகளுக்கு ஆபத்தை முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாம் வீட்டில் வளர்க்கும் நாய்களாக இருந்தாலும் சரி, அல்லது தெருவில் வளரும் நாய்களாக இருந்தாலும் சரி அது அழுது ஊளையிடும் சத்தமானது நம் காதுகளில் விழுந்தால் வரவிருக்கும் ஆபத்தை நமக்கு முன்கூட்டியே உணர்த்துகிறது என்று அர்த்தம்.

நம் வீட்டில் வளர்க்கும் நாய் இது போல அழுதால் நமக்கு ஏதோ துன்பம் வரப்போகிறது என்பதை நாம் உணர, இந்த நாயானது ஊளையிட்டு உணர்த்துகிறது என்று அர்த்தம். அதே போல் தெருவில் வளரும் நாய்கள் இப்படி செய்தாலும் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு துக்க செய்தியோ வீட்டில் பிரச்சினை போன்ற ஏதாவது ஒரு கெட்ட நிகழ்வுகள்  வருவதாக இருந்தால், இந்த சத்தம் நம் காதுகளில் விழும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இந்த நாய்கள் அழும் இந்த சத்தமானது எல்லோர் காதிலும் விழாது. யாருக்கு துன்பம் நேரா போகிறதோ அவர்களுக்கு மட்டும் தான் இந்த சத்தங்கள் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த சத்தம் உங்கள் காதில் விழுந்தால் கொஞ்சம் விழிப்புடன் இருப்பது நல்லது.

- Advertisement -

இப்படி இந்த சத்தம் கேட்டு விட்டால் நாம் உடனே இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள். வரப் போகும் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நாய்கள் ஊளையிட்டால் செய்ய வேண்டியது:
நம் வீட்டு நாய் ஊளையிட்டு அழுதால் ஒரு டம்ளரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து கொண்டு அதில் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகையும் சேர்த்து நாயின் மீது தெளித்து நம் வீட்டை சுற்றியும் தெளித்து வாசற்படியில் ஒரு கற்பூரத்தை ஏற்றி விட வேண்டும். இது நம் வீட்டு நாய் இரவில் அழுதால் அந்த நேரமே செய்தால் மிகவும் நல்லது. இல்லை என்றால் விடிந்தது முதல் வேலையாக இதை செய்து விடுங்கள். ஒரு வேளை தெருவில் வளரும் நாய் இப்படி அழுதால் உங்கள் வீட்டைச் சுற்றி மட்டும் இந்த தண்ணீரை தெளித்து கற்பூரம் ஏற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க, வாழ்க்கை இனிக்க கற்கண்டை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தித்திக்கும் கற்கண்டின் வியக்க வைக்கும் எளிய ஆன்மீக பரிகாரங்கள்!

இப்படி செய்வதன் மூலம் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை எந்த எளிய பரிகாரத்தின் மூலம் தடுத்துக் கொள்ளலாம் என்று ஆன்மீகத்தில் நம்பப்படுகிறது.

- Advertisement -