ஒரு நெயில்பாலிஷில் இத்தனை டிப்ஸா? இந்த ஐடியாவை யூஸ் பண்ணிப் பாருங்களேன்! உங்களை எல்லாரும் ‘பிரில்லியன்ட்’ அப்படின்னு சொல்ல ஆரம்மிச்சுடுவாங்க.

- Advertisement -

புடவை கட்டும் போதும், சுடிதாருக்கு ஷால் பயன்படுத்தும்போது, சேஃப்டி பின்னை பயன்படுத்துவது நம்முடைய வழக்கம். சில்வர் நிறத்தில் இருக்கும் இந்த சேஃப்டி பின்னை பயன்படுத்தும் போது, அது நமக்கு வெளியில் தெரியும். அந்த சேஃப்டி பின்னுக்கு விதவிதமான வண்ணங்களில், நெயில் பாலிஷ்களை தடவி, உலர வைத்துக் கொள்ளுங்கள். எந்த நிற உடையை அணிந்து கொள்கிறீர்களோ, அந்த நிறத்திற்கு மேச்சாக சேஃப்டி பின்னை குத்திக்கொண்டால், சேஃப்டி பின் வெளியே தெரியாமல் இருக்கும்.

nailpolish

நம்முடைய வீட்டில் சில சமயம் கையாலேயே கிழிந்த துணிகளை தைப்பது அல்லது பட்டன் கொக்கி தைப்பது போன்ற பழக்கத்தை வைத்திருப்போம். சில பேருக்கு துணியை தைக்க ஊசியில் நூல் கோர்ப்பது மிக மிக சிரமமாக இருக்கும். அந்த நூலின் முனையில் லேசாக நெயில் பாலிஷைதடவி விட்டு, உங்கள் கையால் நன்றாக அந்த நூலைப் திரித்துவிட்டு அதன் பின்பு, நூலை ஊசியில் கோர்த்து பாருங்கள்‌. ஊசியில் நூலை சீக்கிரமே கோர்த்து விடலாம்.

- Advertisement -

சிறிய பெண் குழந்தைகளுக்கு தங்கத்தோடு போட்டு விட்டால் அந்த திருகாணி சிலசமயம் காணாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த தங்கத் தோடில் பின்பக்கம் இருக்கும் திருத்தணியில் லேசாக நைல் பாலிஷ் தடவி அதன் பின்பு திருகாணியை கம்பலில் போட்டு திருகி விடுங்கள். திருகாணி அடிக்கடி கழண்டு விழாது. இதேபோல் கொலுசு தீருகாணிக்கும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம்.

thirugani-kozhusu-kammal

இதேபோல்தான் குக்கர் மூடியின் கைப்பிடி ஆடிக்கொண்டே இருக்கும். அதிலுள்ள நெட்டை கழட்டிவிட்டு, அந்த நெட்டில் நெயில் பாலிஷை தடவி விட்டு, மீண்டும் குக்கர் கைப்பிடியின் நெட்டை, டைட் செய்துகொண்டால் குக்கரின் கைபிடி மீண்டும் மீண்டும் கழண்டு விழாமல் லூசாகாமல் ஆகாமல் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பு நிற ஹேர்பின் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கும். ஹேர்பின் நன்றாக இருந்தாலும் அதன் மேலே இருக்கும் கருப்பு நிற பெயிண்ட் உரிந்து வந்துவிடும். இப்படிப்பட்ட ஹேர்பின் மேலே கருப்பு நிற நெயில் பாலிஷ் அடித்து காய வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஹேர்பின் எப்போதும் புதுசு போல இருக்கும்.

nail-polish1

நிறைய பேர், தினம்தோறும் கையில் அணிந்து கொள்வதற்கு கவரிங் வளையல்களை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட கவரிங் வளையல்கள் சில நாட்களிலேயே கருத்துப்போய், அந்த கவரிங் வளையலிருந்து பச்சை நிறம் நம்முடைய உடலில் ஒட்ட ஆரம்பிக்கும். இதை சரி செய்வது எப்படி.

nail-polish2

சில்வர் நிறத்தில் இருக்கும் நெயில்பாலிஷ் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளை நிற நெயில் பாலிஷ். இந்த நெயில் பாலிஷை நீங்கள் பயன்படுத்தும் கவரிங் வளையல்களுக்கு உள் பக்கத்திலும், மேல் பக்கத்திலும் அடித்து காயவைத்து விட்டால் கவரிங் நகை எப்போதும் பாலிஷ் போகாமல் புதுசு போலவே இருக்கும்.

nail-polish3

கல் வைத்த வளையல், கல் வைத்த கிளிப், கல் வைத்த நெக்லஸ் என்று விதவிதமாக கவரிங்கில் இப்போது கிடைக்கின்றது. ஆனால் இரண்டு அல்லது மூன்று முறை அந்த நகைகளை நாம் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் கல் விழுந்து விடும். இப்படி கல் வைத்த நகைகளை புதுசாக வாங்கிய உடனேயே, அதன் மேலே வெள்ளை நிற நெயில் பாலிஷ் அடித்து விட்டால், அந்த கவரிங் நகை எப்போதும் புதுசு போல இருப்பதோடு மட்டுமல்லாமல், கல் கீழே விழாமல் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -