உங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்

nairuthi

துறவிகளை தவிர அநேகமாக உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு வசிப்பதற்கென்று சொந்த வீடு இருக்கிறது. வாழ்வில் நிறைவான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு நாம் வசிக்கும் வீட்டின் வாஸ்து பலம் நன்றாக இருக்க வேண்டும். வாஸ்துவில் குபேரன் எப்படி செல்வம் வழங்கும் அதிபதியாகக் கூறப்படுகிறாரோ,அவரைப் போலவே செல்வங்களையும், சுகங்களையும் தரக்கூடியவராக நைருதி தேவர் இருக்கிறார். அவருக்குரிய நைருதி காயத்திரி மந்திரம் இதோ.

நைருதி காயத்திரி மந்திரம்

ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்

அஷ்டதிக் பாலகர்களில் தென்மேற்கு பகுதிக்குரிய நைருதி தேவரின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, தென்மேற்கு திசையை பார்த்து நின்றவாறு நைருதி பகவானை மனதில் நினைத்து, 108 முறை மந்திரத்தை துதித்து வழிபட வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் நைருதி பகவானின் பலம் அதிகரித்து, உங்களுக்கு திடீர் செல்வ யோகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படாத செல்வ சேமிப்பும் உண்டாகும்.

Money

வாஸ்து என்பது தேவலோக கட்டிடக்கலை சிற்பியான மயன் மனிதர்களுக்கு அருளியாதாக கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி உலகில் இருக்கும் எட்டு திசைகளுக்கும், எட்டு தேவர்கள் அதிபதிகளாக இருக்கின்றனர். அதில் தென்மேற்கு பகுதிக்கு அதிபதியாக நைருதி பகவான் இருக்கிறார். நைருதி பகவானின் பலம் ஒரு வீட்டிற்கு அதிகரித்தால் அந்த வீடு எல்லா வளமும் பெறும். அதற்கு நைருதி பகவானுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபித்து வருவது சாலச் சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் கிரக பாதிப்புகள் நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nairuthi gayatri mantra in Tamil. It is also called as Vastu mantras in Tamil or Selvam peruga manthiram in Tamil or Yogangal erpada in Tamil or Nairuthi bhagawan in Tamil.