உங்களுக்கு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க இதை துதியுங்கள்

murugan

நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை எட்டும் போது அவருக்கு செவ்வாய் திசை, செவ்வாய் தோஷங்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் அந்த நபரின் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த செவ்வாய் கிரகத்தின் பாதகங்களை நீக்கி பல நன்மைகளை தரும் குமார மூல மந்திரம் இது.

Lord Murugan

குமார மூல மந்திரம்

ஓம் க்ரூம் குமாராய நம

குன்றிருக்கும் இடமெல்லாம் குமாரனாக முருகப்பெருமானுக்குரிய குமார மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை படிப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய்க்கிழமை மற்றும் மாதங்களில் வரும் சஷ்டி தினங்களில் குளித்து முடித்து விட்டு, பூஜை அறையில் முருகன் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, ஏதேனும் ஒரு பழத்தை நைவேத்தியம் செய்து, இந்த மூல மந்திரத்தை 108 முறை துதித்து முருகனை வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் திசை, செவ்வாய் தோஷம் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜன வசியம் ஏற்படும்.

பண்டையத் தமிழர்கள் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகப் பெருமானை வழிபட்டு வந்துள்ளனர். எளியோருக்கு எளியோராகவும்,வலியோர்க்கு வலியோராகவும் இருப்பவர் முருகன். அவர் ஆயுதமாக கொண்டிருக்கும் வேலானது நம்மை தாக்க வரும் கர்மவினைகளையும்,துஷ்ட சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்டதாகும். குமரனாக இருக்கும் முருகனுக்குரிய இந்த மூல மந்திரத்தை தவிப்பவர்களுக்கு வாழ்வில் மேலான நிலையை அடைவார்கள் என்பது நிச்சயம்.

இதையும் படிக்கலாமே:
துரதிர்ஷ்டங்கள் நீங்க, வளமை பெருக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kumara moola mantra in Tamil. It is also called as Murugan mantras in Tamil or Murugan slokas in Tamil or Sevvai dosham neenga manthiram in Tamil or Muruganin maanthirangal in Tamil.