முழு நிலவு தோன்றக்கூடிய நாளை தான் பௌர்ணமி என்று கூறுகிறோம். பௌர்ணமி தினத்தன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு என்பது நம் வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு பௌர்ணமி அன்று வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய வழிபாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக திகழக்கூடிய கிரிவலம் மேலும் சிறப்பானதாக அமைவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாழ்க்கை சிறப்பாக அமைய கிரிவலப் பரிகாரம்
பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு என்பது சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அதேபோல் அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பௌர்ணமி என்றதும் நம் நினைவிற்கு வர கூடிய மற்றொரு வழிப்பாட்டு முறை என்பது சத்திய நாராயண பூஜை ஆகும். இந்த பூஜையை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சிவாலயங்களில் கிரிவலம் செல்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
சிவாலயங்கள் மட்டுமல்லாமல் மலை மேல் இருக்கும் எந்த தெய்வத்தின் கோவிலாக இருந்தாலும் பௌர்ணமி அன்று அந்த மலையை கிரிவலம் வரலாம். ஆன்மீக ரீதியாக எந்த அளவிற்கு நன்மையை தருகிறதோ அதே அளவிற்கு ஆரோக்கிய ரீதியாகவும் நன்மையை தரும் என்று அறிவியல் பூர்வமாகவும் கூறப்படுகிறது. அப்படி சிறப்பு மிகுந்த கிரிவல வழிபாடு சமயத்தில் செய்யக்கூடிய ஒரு வழிமுறையை பற்றி பார்ப்போம்.
பொதுவாக கிரிவலம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய முக்கியமான ஒரு கோவில் என்றால் அது திருவண்ணாமலை தான். ஆனால் திருவண்ணாமலை தவிர்த்து இன்னும் பல ஆலயங்களில் இந்த கிரிவலம் வழிபாடு என்பது நடைபெறுகிறது. உதாரணமாக கூற வேண்டும் என்றால் பழனி மலை, திருப்பரங்குன்றம் மலை, ஐயர் மலை போன்ற மலை தொடர்பான ஆலயங்கள் இருக்கும் அனைத்து இடங்களையும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது என்பது வழக்கமாகவே இருந்து வருகிறது.
எந்த தெய்வத்தின் ஆலயமாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் பெயரை கூறியவாறு பௌர்ணமி இரவு வலம் வருவது நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் வாழ்க்கைக்கும் நல்ல மாற்றத்தை தரும். அப்படி நாம் கிரிவலம் வரும் பொழுது நம்முடைய கையில் வில்வ இலையை வைத்துக்கொண்டு கிரிவலம் வந்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டம் என்னும் இருள் நீங்கி பௌர்ணமி நிலவு போல் பிரகாசமாக வாழ்க்கை மாறும் என்று கூறப்படுகிறது.
மலையை எத்தனை சுற்றுகள் வந்தாலும் அத்தனை சுற்றுகளும் கையில் இந்த வில்வ இலையை வைத்துக் கொள்ள வேண்டும். கையில் வைத்துக்கொள்ள வசதி இல்லை என்பவர்கள் தங்களுடைய பாக்கெட், பர்ஸ், ஹேண்ட்பேக் போன்றவற்றில் வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்த பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி இந்த வில்வ இலையை வீட்டில் பூஜையறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு வைத்து வழிபாடு செய்து விட்டு உங்களுடைய அன்றாட வேலைகளும் நீங்கள் பார்க்கலாம். வில்வ இலை காய்ந்த பிறகு கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.
இதையும் படிக்கலாமே: நாளை 17/09/2024 பித்ரு பக்ஷம் முன்னோர் ஆசி பெற!
பத்து ரூபாய் கொடுத்தாலே வில்வ இலை என்பது கிடைக்கும். இந்த வில்வ இலையை கையில் வைத்துக்கொண்டு நாம் செய்யக்கூடிய வழிபாடானது நமக்கு வெற்றி தருவதோடு நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்