நம்முடைய வாழ்க்கை எப்போதுமே நாலு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஜாம் ஜாம் என்று இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் எப்போதுமே நம்முடைய வாழ்க்கை, அடுத்தவர்கள் பொறாமைப்பட கூடிய அளவுக்கு இல்லை. அடுத்தவர்களை பார்த்து தான் நாம், பொறாமைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றோம்.
உங்களுடைய வாழ்க்கையும் அடுத்தவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு உயரத்தில் செல்ல வேண்டுமா? நாலு பேர் மதிக்கும் வகையில் உங்களுக்கும் ஒரு வேலை கிடைக்க வேண்டும். உங்களுக்கு கீழ் நாலு பேர் வேலை செய்ய வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன வழிபாடு செய்வது. இதற்கான சக்திவாய்ந்த ஹனுமன் வழிபாட்டை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை நட்சத்திரம் எதுவுமே பார்க்க வேண்டாம். நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால், நாளை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, குல தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் 2 கிராம்பு, 3 ஏலக்காய் எடுத்துக்கொள்ளுங்கள். அனுமனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்.
ஹனுமன் மந்திரம்
ஓம் ஹனுமதே நமஹ !
மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் ஏலக்காயை அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த டம்ளர் தண்ணீரை எடுத்து வடகிழக்கும் மூலையில் வைத்து விட வேண்டும். இரண்டு நிமிடம் அனுமனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாத்தியம் கிடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த தண்ணீரை எடுத்து குடித்து விடுங்கள்.
ஏலக்காயும் கிராம்பும் மென்று விழுங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. பயப்படாதீங்க, அந்த இரண்டு பொருட்களை எடுத்து தனியாக வைத்துவிட்டு, வெறும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு, உங்களுடைய அன்றாட வேலை துவங்கலாம். இன்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடி, இதை செய்தாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்த வேலை கிடைக்கும். தினமும் இந்த மந்திரத்தை சொல்லி அந்த டம்ளர் தண்ணீரை குடித்து வர, உங்களுடைய வாழ்க்கை நான்கு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நல்லபடியாக மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: திங்கட்கிழமை அமாவாசை பரிகாரம்
குறிப்பாக வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு தீர்வு கிடைக்க, இந்த பரிகாரம் நல்ல பலன் கொடுக்கும். எனக்கு இருக்கின்ற வேலையில் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. மேனேஜர் தொல்லை தாங்க முடியவில்லை. இப்படி ஏதாவது பிரச்சனை இருந்தாலும் நீங்கள் அந்த பிரச்சனை சரியாவதற்கு இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நாளில் பலன் கிடைக்க வேண்டும் என்று அவசரப்படக்கூடாது. தொடர்ந்து ஒரு 11 நாள் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.