- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு

வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நாளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளே வியாழக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷ நாளும் வந்திருக்கிறது. இந்த மாதம் முழுவதும் எல்லோருக்கும் நல்ல மாதமாக, சந்தோஷமான மாதமாக, செல்வம் வளம் நிறைந்த மாதமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை, அந்த எம்பெருமான் ஈசனிடம் வைத்து, இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

பிறவி தோஷம் நீங்க வேண்டும் என்றால் பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். உங்களுடைய பிறவி தோஷம் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் பிரதோஷ நாளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று அந்த சன்னிதானத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மனம் உருகி, தூய்மையான மனதோடு இந்த நாமத்தை உச்சரித்து எம்பெருமானை வழிபாடு செய்தாலே கோடி புண்ணியம். உங்கள் வாழ்க்கை செல்வநிலையில் உயர்ந்து நிற்கும். கஷ்டங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைந்து போகும். இருந்தாலும் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் நமக்கு ஒரு சில விஷயங்களை சொல்லி உள்ளது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால் சிவபெருமானை நாம் எப்படி எல்லாம் வழிபாடு செய்தால் நம் கஷ்டங்கள் தீரும் என்பதை பற்றிய சில ஆன்மீக குறிப்புகள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு

குரு திசை நடப்பவர்கள், ஜாதக கட்டத்தில் குரு தோஷம் இருப்பவர்கள், குரு சரியில்லாமல் திருமணம் நடக்காமல் இருப்பவர்கள், குரு சரியில்லாமல் படிப்பில் சிறந்து விளங்காத மாணவர்கள், வறுமையில் கஷ்டப்படுபவர்கள், கடன் சுமையில் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் நாளைய தினம் கட்டாயம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

வியாழன் என்றால் குரு, குரு தோஷம் நீங்க நாளைய தினம் சிவன் வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். அதேபோல வியாழன் என்றால் நம் நினைவுக்கு வருவது குபேரன். குபேர சம்பத் கிடைக்க வேண்டும் என்றாலும் நீங்கள் நாளைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் குபேரருக்கே ஐஸ்வர்யத்தை கொடுத்தது இந்த சிவபெருமான்தான்.

குருவுக்கு உகந்த நிறம் என்றால் அது மஞ்சள். மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய எந்த பூக்களை வேண்டும் என்றாலும் நாளை நீங்கள் சிவபெருமானுக்கு உங்கள் கையால் மாலையாக தொடுத்து கொண்டு போய் கொடுக்கலாம். குரு பகவானின் அருள் இதனால் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். நாம் எல்லோருக்கும் எளிமையாக கிடைக்கக்கூடிய மஞ்சள் பூ சாமந்திப்பூ.

- Advertisement -

அதை வாங்கி நாளைக்கு சிவபெருமான் கோவிலுக்கு கொடுங்க. உங்க வீட்டில் இருக்கும் சிவலிங்கம், சிவபெருமானின் திருவுருவப்படம், அண்ணாமலை ஈஸ்வரரின் படம் எது இருந்தாலும் அந்த இறைவனுக்கு சூட்டி வழிபாடு செய்யவும். உங்கள் பண கஷ்டம் மன கஷ்டம் தீர வேண்டும் என்றும் வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரதோஷ நேரம் என்றால் அது மாலை நேரம் தான். 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் மந்தமாக இருக்கிறார்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால் நாளை வரக்கூடிய வியாழக்கிழமை அன்று அவர்களுடைய கையால் கொண்டைக்கடலை மாலையை குரு பகவானுக்கு சாத்தி, குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை போட்டு அர்ச்சனை செய்வது குரு அருளை பெற்று தரும்.

பொதுவாக வியாழக்கிழமை என்றால் குரு பகவானுக்கு இந்த வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் பிரதோஷ தினத்தில், பிரதோஷ நேரத்தில் குருபகவானை நீங்கள் வழிபாடு செய்தால் இரட்டிப்பு பலனை பெறலாம் என்பது நம்பிக்கை. நாளைக்கு தேவைப்படுபவர்கள் இதையும் பின்பற்றலாம்.

இது தவிர வழக்கம் போல பிரதோஷ நேரத்தில் நீங்கள் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் வாங்கி கொடுக்கலாம். அபிஷேகத்திற்கு பால் விபூதி போன்ற பொருட்களை வாங்கி கொடுங்கள். அது உங்களுடைய சவுகரியம். முடிந்த வரை நாளைய தினம் எல்லோரும் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனத்தை இரண்டு கண்கள் குளிர பார்த்து வழிபாடு செய்தாலே அந்த எம்பெருமானின் அருள் நிறைவாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மன பயம் நீங்க பரிகாரம்

கூட்டத்தில் முட்டி மோதி வழிபாடு செய்யணும் என்று நினைக்காதீங்க. கூட்டம் எல்லாம் கலைந்து சென்ற பிறகு சிவபெருமானை ஆற அமர தரிசனம் செய்யுங்கள். முந்தியடித்துக் கொண்டு இறைவனை வழிபாடு செய்தால் தான் இறையருள் கிடைக்கும் என்பது கிடையாது. அந்த கோவிலில் கூட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து சிவபெருமானை மனக்கண்களால் காணுங்கள். கோடி புண்ணியம் அல்ல, கோடான கோடி புண்ணியத்தை பெறலாம் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்