- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை சிவன் வழிபாடு செய்ய வேண்டிய 3 ராசிகள்

நாளை சிவன் வழிபாடு செய்ய வேண்டிய 3 ராசிகள்

- Advertisement -

நாளை கார்த்திகை மாதத்தின் முதல் வார சோமவார விரதம் தொடங்கவிருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைக்கு அத்தனை சிறப்பு. கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன் மனைவி சண்டை தீரவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், நாளைய தினம் சிவபெருமானை கட்டாயம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும்.

இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒரு குறிப்பிட்ட 3 ராசிகள் சொல்லப்பட்டுள்ளது. நாளை தினம் இந்த மூன்று ராசிகாரர்களும், சிவபெருமான் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் விலகும். அந்த ராசிக்காரர்கள் யார் யார், நாளைய தினம் சிவபெருமான் முன்பு பாட வேண்டிய பாடல் என்ன, சுலபமான கார்த்திகை சோமவர விரதத்தை எப்படி மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சோமவார சிவன் வழிபாடு

நாளை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஈசனை நினைத்து விரதத்தை துவங்குங்கள். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் பலகாரம் சாப்பிட்டும், உங்களுடைய விரோதத்தை மேற்கொள்ளுங்கள். ஒரு பொழுது என்று சொல்லுவார்கள்.

நாளைய தினம் ஒரு பொழுது உணவருந்தி ஈசனை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் உடனே கிடைக்கும். காலையிலிருந்து உபவாசம் இருந்து மாலை ஈசனை தரிசனம் செய்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு சாப்பிடுவது வழக்கம். உங்களால் எப்படி முடியுமோ அப்படி விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

சோமாஸ்கந்தர் வழிபாடு நாளை ரொம்ப ரொம்ப சிறப்பு. சிவன் பார்வதி முருகன் மூன்று பேரும் ஒன்றாக இருந்து பக்தர்களுக்கு காட்சி தருவதை சோமஸ்கந்தர் வழிபாடு என்று சொல்லுவார்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று ஈசனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்துவிட்டு சோமஸ்கந்தரை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும். குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சிவபெருமான் குடும்பத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஈசன் குடும்பத்தை தரிசனம் செய்யப் போகின்றோம்.

முடிந்தால் தம்பதி சரீரமாக நாளை கோவிலுக்கு செல்லுங்கள், குழந்தைகளோடு சென்றாலும் இன்னும் சிறப்பு தான். நிறைய சிவன் கோவில்களில் நாளை சங்கு அபிஷேகம் நடைபெறும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து கொண்டு போய் கொடுக்கலாம். ஒரு வாரம் சங்கு அபிஷேகத்திற்கான கட்டளையை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இப்படி உங்களால் முடிந்த கைங்கரியத்தை பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செய்யுங்கள். இதெல்லாம் தவிர சிவ பக்தர்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம், உழவாரப்பணி.

- Advertisement -

சிவபெருமானுக்கு சேவை செய்வது, சிவன் கோவிலை சுத்தப்படுத்துவது. கோவிலுக்கு வரும் சிவனடியார்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது, இதுபோல பணிகள் எல்லாம் ஈசனுக்கு செய்த பணிகளாக சொல்லப்பட்டுள்ளது. மக்களுக்கு செய்யும் சேவை தான் மகேசனுக்கு செய்யும் சேவை. ஆகவே இந்த சோமவாரத்தில் உங்களால் முடிந்த ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

கடகம், சிம்மம், விருச்சிகம் இந்த 3 ராசிக்காரர்கள் நாளைய தினம் விரதம் இருந்து ஈசனை வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய கஷ்டங்கள் கூட சுலபமாக தீர்ந்துவிடும். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் இறைவனை வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்ல வரவில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு நாளைய தின வழிபாடு பல கோடி மடங்கு நன்மையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவார பாடல்

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?

இதையும் படிக்கலாமே: சோமவார விரதத்தில் தீபம் ஏற்றும் முறை

இந்த தேவார பாடலை நாளைய தினம் ஈசனின் முன்பு பாடினால் ஈசன் மனமகிழ்ச்சி அடைந்து உங்களுக்கான வரங்களை கொடுத்து விடுவான். இது ஒரு பத்து அடிகளை கொண்ட பாடல். முதல் அடி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலை உங்களால் படிக்க முடியும் என்றால் படியுங்கள். இல்லை என்றால் கைபேசியில் ஒலிக்க விட்டு உங்கள் காதால் கேளுங்கள். வீட்டிலேயே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை காதால் கேட்பதே கோடி புண்ணியம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு அந்த வழிபாடு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்