லாபம் பெருக பாலமுருகனை வழிபட வேண்டும். “பால” முருகன் “லாப” முருகன். பால என்ற வார்த்தையை திருப்பி போடும்போது, லாப என்ற வார்த்தை நமக்கு வருகிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான முருகன் வழிபாடு இருக்கிறது. நீங்களும் பணக்காரராக வேண்டும். உங்களுக்கும் வருமானம், லாபம் பெறுக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய ஒரு எளிமையான முருகர் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த நாட்களில் செய்வது சிறப்பு. வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, கிருத்திகை திதியில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை சஷ்டி திதி வந்திருக்கிறது. சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் பண நஷ்டம், வியாபார நஷ்டம், வேலையில் பிரச்சனை இதுபோல நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அந்த நஷ்டத்தில் இருந்து வெளிவர இந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.
வளர்பிறையில் வரும் விசேஷ நாட்களில் முருகனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம், மஞ்சள் நிற மாலை வாங்கிக் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறத்தில் பட்டு வஸ்திரம் வாங்கி முருகனுக்கு தானம் கொடுத்தால் செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.
மஞ்சள் பூக்கள் சேர்த்து தொடுத்த மாலையை மட்டும் இரண்டாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்று பாலமுருகனுக்கு, இன்னொன்று அவர் வாகனமான மயிலுக்கு. மயிலுக்கு முதலில் மாலை செலுத்துவிட்டு, பிறகு முருகனுக்கு மாலை போட்டு வழிபாடு செய்தால் உங்களுடைய கஷ்டங்கள் உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை.
மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாளைய தினம் வளர்பிறையில் வந்திருக்கும் சஷ்டி திதி மிக மிக உகந்தது. இந்த மாலையையும் வஸ்திரத்தையும் முருகன் கோவிலுக்கு வாங்கி கொடுத்து, கோவிலில் உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானை ஆறு முறை, வலம் வர வேண்டும். மனதிற்குள் சரவண பவ மந்திரத்தை சொல்லி முருகனை வளம் வந்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு லாபம் தரும் முருகன் மந்திரத்தை கோயிலில் அமர்ந்து 108 முறை சொல்வது சிறப்பு.
லாபம் தரும் முருகன் மந்திரம்
ஓம் சத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்து துவரம் பருப்பால் செய்த சாதம், சாம்பார் சாதம் வாங்கி கொடுத்தாலும் சரிதான். மூன்று பேருக்கு ஏழை எளியவர்களுக்கு உங்கள் கைகளால் அன்னதானம் செய்துவிட்டு, உங்கள் வேலையை துவங்குங்கள்.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது என்பவர்கள் கட்டாயம் நாளைய தினம் வீட்டிலிருந்தாவது இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகனுக்கு மஞ்சள் நிற பூக்களை வாங்கி போட்டு, இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் மங்கலம் உண்டாகும். லாபம் பெருகும். பாலமுருகன் உங்களுக்கு லாபங்களை வாரி வாரி வழங்குவான்.
இதையும் படிக்கலாமே: மே மாதத்தில் ஐஸ்வர்யம் பெருக
அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த எளிமையான ஆன்மீக குறிப்பை நாளைய தினம் பின்பற்றுபவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில், நல்ல முன்னேற்றம் தெரியும். நம்பிக்கையோடு செய்ய வேண்டும். மாதம் வரக்கூடிய சஷ்டி திதியில் தொடர்ந்து முருகனை கும்பிட எண்ணில் அடங்காத நன்மைகள் நடக்கும் என்ற தகவல் உடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.