- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல கணவன் கிடைக்க வழிபாடு

நல்ல கணவன் கிடைக்க வழிபாடு

- Advertisement -

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது போலவே கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். எல்லோருக்கும் எதிர்பார்த்த வரம் கிடைத்து விடுவது கிடையாது. அவரவர்களின் கர்ம வினைபடித் தான் திருமண பந்தமும் இணைகிறது. மனதிற்கு பிடித்தபடி வரம் போன்ற வரன் அமைவதற்கு பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? என்னும் தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமைவதற்கு முதலில் பெண்கள் இறைவன் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும். நாளும் கோளும் செய்யாதது கூட, இறைவன் செய்வார் என்னும் நம்பிக்கையை பெண்கள் மனதில் நிறுத்திக் கொண்டால் எப்பேர்ப்பட்ட இன்னல்களும் உங்களை நெருங்காமல் தடுக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலையில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து கை, கால், முகத்தை மட்டும் அலம்பி கொண்டு பூஜை அறைக்குச் சென்று அங்கு ஒரு தட்டில் முகத்திற்கு பூசக்கூடிய மஞ்சள், சீயக்காய், நல்லெண்ணெய் ஆகியவற்றை வைத்து மனதார நல்ல வரன் அமைய உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். பின்னர் கண்டிப்பாக முகத்திற்கு மஞ்சள் பூசிக் கொள்ள வேண்டும்.

தலையை நன்கு உலர்த்தி காய வைத்து விட்டு, நல்ல சுத்தமான ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள். சிகப்பு அல்லது மஞ்சள் நிற உடையை உடுத்தி பூஜை அறைக்கு சென்று அங்கு ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள் நோன்பு கயிறை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நோன்பு கயிறை கையில் கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் மனதார இறைவனிடம் எனக்கு பிடித்தபடி நல்ல வரன் அமைய வேண்டும், நான் என்ன பாவம் செய்திருந்தாலும், அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

- Advertisement -

நோன்பு கயிறு தயாரிக்கும் முறை:

ஒரு வெள்ளை நிற அறுந்து போகாத மெல்லிய நல்ல நூலில் மஞ்சளை தடவி காய வைக்க வேண்டும். நூலை கையில் கட்டும் அளவிற்கு கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். நூலின் நடுப்புற பகுதியில் உதிரி பூ ஒன்றை வைத்து முடி போட்டுக் கொள்ளுங்கள். தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது வெற்றிலை, கொட்டை பாக்கு ஒன்றை வைத்து வெற்றிலையின் மீது நோன்பு கயிறை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கூடாரவல்லி 2025

ஒன்பது வெள்ளிக் கிழமைகளில் இது போல கன்னிப் பெண்கள் செய்து வர விரைவாகவே நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம். ஒருவருடைய வாழ்க்கையை நிர்ணயம் செய்வது அவர்களுடைய கர்ம வினை ஆகும். இந்த கர்மத்தை எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், நாம் அனுபவிக்க வேண்டியது விதி ஆகும். இந்த விதிப்படி தான் வாழ்க்கை துணையும் அமைந்து விடுகிறது. காலையிலேயே எழுந்து கர்ம பாவ வினைகளுக்கு மன்னிப்பு கேட்கும் படி இந்த வழிபாடு அமைந்திருக்கிறது. பின்பு இந்த வழிபாட்டில் முழு உடல் சுத்தியுடன், பரிசுத்தமான மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதால், பாவங்கள் தீர்ந்து உங்களுக்கு நல்ல வரன் எதிர்பார்த்தபடி வரமாக அமைவார்.

சற்று முன்