வீட்டில் நல்ல சக்தியை ஈர்க்க உதவும் மந்திரம்

Amman-1

நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறோம் நாம் கண்ணால் காண்கிற,காதால் கேட்கிற, உடலால் உணர்கிற விஷயங்கள் மட்டும் தான் உண்மையென்று. ஆனால் இம்மூன்றையும் கடந்து இருக்கும் சக்திகள் சில இப்புவியில் உண்டு. சித்தர்கள், யோகிகள், மகான்கள் மற்றும் இதயத்தை மையமாக கொண்டு வாழும் மனிதர்களே இத்தகைய அமானுஷ்ய சக்திகளை உணர்ந்து கொள்ள முடியும். அந்த அமானுஷ்ய சக்திகளில், சில தீய சக்திகள் சிலரை பீடித்து அவர்கள் வாழ்வில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும். அத்தகைய சக்திகளை அறவே நீக்கி வீட்டிற்குள் நல்ல சக்திகளை ஈர்க்க உதவும் “துர்க்கா தேவியின்” மந்திரம் இது.

Amman deepam

துர்க்கா தேவி மந்திரம்:

பால் கிரஹ் பிபூதானாம்
பாலாணாம் ஷாந்தி கார்கம்
ஸங்கட்பேடே ச்ச ந்ரிணாம்
மைத்ரி கரண் முத்மம்

இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 27 முறை உரு ஜெபிக்க வேண்டும். மேலும் செவ்வாய் கிழமைகளில் ராகு கால நேரத்தில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கோ அல்லது அந்த துர்க்கா தேவி சந்நிதி உள்ள கோவிலுக்கோ சென்று, அகல்விளக்கிலோ அல்லது எலுமிச்சை பழத்திலோ பசுநெய் ஊற்றி விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலையை அந்த துர்க்கா தேவிக்கு சாற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்கள் வீட்டில் துஷ்ட சக்தியின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தடை மற்றும் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைபாடுகள் முற்றிலும் நீங்கி உங்கள் வீட்டில் நல்ல சக்திகள் குடிகொள்ளும்.

இதையும் படிக்கலாமே:
கவலை, கோபம், பயம், குழப்பம் போன்றவை தீர உதவும் மந்திரம்

English Overview:
Here we have Durga devi mantra in Tamil. By chanting this mantra regularly one can get away from negative energy and can increase positive energy.