கவலை, கோபம், பயம், குழப்பம் போன்றவை தீர சூரிய மந்திரம்

Suriyan-manthiram

வாழ்க்கை என்பது நம் அனைவருக்கும் ஒரு முறை மட்டுமே வாழக் கிடைக்கும் ஒரு அற்புதமான வரமாகும். ஆனால் நாம் யாருமே அத்தகைய ஒரு அற்புதமான வாழ்வை அதன் முழுமைத்தன்மையோடு வாழ்வதில்லை. தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கப் போவது வரை அன்று நடக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வால் நம் மனதில் கவலை, கோபம், பயம், பதட்டம் இப்படி ஏதேனும் ஒன்று ஏற்பட்டு நம்மை துன்புறுத்துகிறது. இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நாம் வாழ்வில் முன்னேற அனைத்தையும் கொடுக்கும் அந்த சூரிய பகவானை வழிபட வேண்டிய மந்திரம் இது.

suriyan

மந்திரம்:
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்

இம்மந்திரத்தை தினமும் காலையில் குறிப்பாக சூர்யோதய வேளையில், அந்த சூரியனை தரிசித்த வாறே 9 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் ஞாயிற்று கிழமைகளில் காலை வேளைகளில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சூரிய பகவான் சந்நிதியில் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் அக்கோவிலிலுள்ள ஸ்தல விருட்சத்திற்கு உங்கள் கைகளால் தூய்மையான நீரை ஊற்ற வேண்டும். இதனால் அந்த சூரிய பகவான் அருள் பெற்று உங்கள் மனதில் இருக்கும் கவலை, கோபம், பயம், குழப்பம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, உங்கள் நல்வாழ்விற்காக நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
எந்நேரமும் மன நிம்மதியோடு வாழ மந்திரம்

English Overview:
Here we have Surya namaskar mantra in Tamil. One can get the grace of Lord Sun by chanting this mantra on early morning by seeing the sun.