எந்தவித கெட்ட கனவுகளும் வராமல், மன பயம் நீங்கி இரவு நிம்மதியாக தூங்க, தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டாலே போதும்.

dream
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு இரவு நிம்மதியான தூக்கம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. காரணம் மன அழுத்தம். அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்படி நாம் ஒரு நல்ல நிலைமைக்கு வருவது என்ற தேடலிலேயே நிம்மதியான தூக்கத்தை இழக்கின்றோம். ஆரோக்கியத்தை இழக்கின்றோம். இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில பேருக்கு கெட்ட கனவு, மன பயத்தின் மூலம் தூக்கம் கெடுகிறது. இதில் உங்களுக்கு மன அழுத்தத்தின் மூலம் தூக்கம் வராமல் இருந்தாலும் சரி, அல்லது கெட்ட சக்தி, கெட்ட கனவு மூலம் தூக்கம் வராமல் இருந்தாலும் சரி, இந்த ஒரு பொருளை உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி பாருங்கள். நிச்சயமாக இரவு நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

Garlic(Poondu)

தலையணைக்கு அடியில் வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன? நாம் எல்லோர் வீட்டு சமையலறையிலும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பூண்டு தாங்க அந்த பொருள். (இந்த பூண்டை எதற்காக விரத நாட்களில் சமையலில் சேர்த்துக் கொள்ளக்கூடாதுன்னு சொல்றாங்க? இந்த கேள்விக்கான பதிலும் இந்த பதிவின் இறுதியில் உங்களுக்காக) பூண்டிலிருந்து 3 பல் பூண்டை எடுத்து உங்களுடைய தலையணைக்கு அடியிலேயோ அல்லது யார் கண்களுக்கும் தெரியாமல் மெத்தைக்கு அடியிலோ வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரவு தூங்கும்போது மட்டும் இந்த பூண்டு தலையணைக்கு அடியில், மெத்தைக்கு அடியில் இருந்தால் போதும். காலை விடிந்தவுடன் அந்த பூண்டினை எடுத்து ஏதாவது ஒரு அலமாரியில் வைத்து விடவேண்டும். மீண்டும் இரவு தூங்க செல்லும் போது அந்த பூண்டினை எடுத்து உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டால் போதும். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்த பழைய பூண்டினை எடுத்து குப்பையில் போட்டு விட்டு மீண்டும் புதிய பூண்டினை வைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

dream

இப்படி செய்தால் இரவு நேரங்களில் கெட்ட கனவுகள் உங்களை தொந்தரவு செய்யாது. ஆன்மீக ரீதியாக எதிர்மறை ஆற்றலை விரட்டக் கூடிய சக்தி இந்த பூண்டுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல், கெட்ட கனவின் மூலம் உங்களுடைய தூக்கம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

பூண்டியில் இருந்து வெளிவரக்கூடிய வாதத்தினை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய மன அழுத்தம் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மன அழுத்தத்தினால் உங்களுடைய தூக்கம் பாதிக்கப்பட்டாலும், தூங்கும்போது இந்த பூண்டினுடைய வாசத்தினை சுவாசிக்கும் போது, உங்களை அறியாமலேயே உங்களுடைய மனது லேசாகி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

cold1

உங்களுக்கு தலை பாரம் சளி தொந்தரவு இருந்தால், உங்களுடைய தலையணைக்கு அடியில் பூண்டு தோலினை வைத்து உறங்க வேண்டும். பூண்டுதோலை மொத்தமாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு துணிப்பையில் போட்டு சிறிய முடிச்சாக கட்டி இரவு தூங்கும் போது இந்த முடிச்சில் இருந்து வெளிவரும் வாதத்தினை சுவாசிக்கும் போது, நம்முடைய சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், தலைபாரம் நீங்கும்.

பூண்டு

சரிங்க, இவ்வளவு மகத்துவங்கள் கொண்ட இந்த பூண்டினை எதற்காக விரத நாட்களில் சாப்பிட வேண்டாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. மனிதர்களுக்கு இருக்கக்கூடிய உணர்ச்சியை அதிகப்படியாக தூண்டி விடக் கூடிய சக்தி இந்த பூண்டில் உள்ளது. அதாவது அதிகப்படியான காமத்தை தூண்டும் சக்தி இந்த பூண்டுக்கு உண்டு என்பதால் தான் விரத நாட்களில் நம்முடைய உணவில் இந்த பூண்டினை சேர்க்கக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளார்கள் என்ற இந்த தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -