- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல வேலை கிடைக்க பதிகம்

நல்ல வேலை கிடைக்க பதிகம்

- Advertisement -

எதிர்பாராத சூழ்நிலையில் வேலையை இழந்து, சம்பளத்தை இழந்து, தவிப்பவர்களுக்குத்தான் வேலை இல்லாத கஷ்டம் என்ன என்பது புரியும். இந்த மாதம் சம்பளம் வரவில்லை என்றால், குடும்பத்தை நடத்த முடியாது. ஒரு மாதம் கடன் வாங்கி சமாளித்து விட்டோம்.

நல்ல வேலை கிடைக்கவில்லை, அடுத்த மாதமும் வேலை கிடைக்கவில்லை என்றால், பிச்சை எடுப்பதை தவிர வேறு வழியே கிடையாது என்று ரொம்ப ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள் கூட, இந்த பாடலை மனம் உருகிப் படைத்தால், புதன் பகவானை மனம் உருகி வேண்டினால், உங்கள் பண கஷ்டத்தை சமாளிக்க, ஏதோ ஒரு வேலை உடனடியாக கிடைக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

வேலை கிடைக்காமல் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். இந்தக் கோவிலில் புதன் பகவானுக்கு என்று தனி ஸ்தலம் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கெட்டுப்போய் இருந்தாலும் நீச்சமடைந்திருந்தாலோ, புதன் திசை நடந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும்.

இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வரும்போது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை நிவர்த்தி ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சென்று வந்து வீட்டில் இருந்தபடியே தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, புதன் பகவானை நினைத்து இந்த பாடலை பாட துவங்கலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் கவலைப்படாதீங்க.

- Advertisement -

வீட்டு பக்கத்தில் இருக்கும் நவகிரஹ கோவிலுக்கு சென்று புதன் பகவானை மனம் உருகி வழிபாடு செய்து, புதன் பகவானுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிறகு இந்த பாடலை படிக்கத் துவங்குங்கள்.

வேலை கிடைக்க படிக்க வேண்டிய பாடல்

கண்காட்டு நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்

- Advertisement -

பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டுங் கொடியானே.

இதையும் படிக்கலாமே: சளி தொந்தரவு நீங்க ஆன்மீக பரிகாரம்

தினமும் வேலை தேட செல்வதற்கு முன்பு இந்த பாடலை படிச்சிட்டு போங்க. ஏதாவது இன்டர்வியூ வந்தா அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த பாடலை படிக்கவும். நிச்சயமா உங்களுக்கான நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்