- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசளி தொந்தரவு நீங்க ஆன்மீக பரிகாரம்

சளி தொந்தரவு நீங்க ஆன்மீக பரிகாரம்

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நிறைய குழந்தைகளுக்கு, சளி இருமல் மூச்சு திணறல் இதுபோல பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், குழந்தைகள் சரியாக சாப்பிடாது. உடல் எடை ஏறாது. உடல் பலவீனமாக இருப்பார்கள்.

இதுபோல பிரச்சனை உங்கள் குழந்தைக்கும் இருந்தால், உங்களுக்கான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இந்த பதிவில் உள்ளது. மிக மிக எளிமையான பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால், உங்கள் குழந்தைக்கு இருக்கும், அந்த ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடும்.

- Advertisement -

கபம் பிரச்சனையிலிருந்து வெளிவர பரிகாரம்

ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில், கிருஷ்ணர் கோவில், இதில் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த 3 கோவிலில், உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் இருக்கிறது. அந்த கோவிலுக்கு வேண்டுதல் வைக்க வேண்டும். குறிப்பாக ரோகிணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள்.

பச்சரிசி சாதத்தில், நெய் பருப்பு, போட்டு பிசைந்து, குழந்தைக்கு அந்த கோவிலிலேயே இந்த சாதத்தை சாப்பிட கொடுக்க வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தன்று, இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுடைய குழந்தை நன்றாக சாப்பிட துவங்கிவிடும். சளி தொந்தரவு, இரும்பல் தொந்தரவு குறைய, ரோகினி நட்சத்திரத்தன்று இந்த குறிப்பிட்ட மூன்று கோவிலிலும் பிரார்த்தனை வைப்பது, மிகச் சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

அதே போல உங்களுடைய குழந்தைக்கு, உடல்நிலை சரியாகி விட்டது. பிரச்சினைகள் எல்லாம் குறைந்துவிட்டது எனும் பட்சத்தில், குழந்தைக்கு எடைக்கு எடை நிகராக இந்த கோவிலுக்கு அரிசி, வாழைப்பழம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி தருவதாக வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: சுப காரிய தடை நீங்க

பிள்ளைகளுடைய எடையும் கூடும். குழந்தைகளுக்கு கபம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்