அக்னி நட்சத்திரம் என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருவது சூரிய பகவான் தான். அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளிலும் அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாளிலும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல தான் அக்னி நட்சத்திரம் முடிவு வரும் நாளிலும் நாம் சில விஷயங்களை கடைப்பிடிக்கும் பொழுது நம்முடைய குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்றும் எப்படி எல்லாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
செல்வம் பெருக அக்னி நட்சத்திரம்
நாளைய தினம் அக்னி நட்சத்திரம் முடிவு பெறுகிறது இன்றைய நாளில் சூரிய பகவானுக்கு சில பரிகார முறைகளை செய்வதன் மூலம் பல வித நன்மைகளை நாம் பெறலாம். அதில் முதலாவதாக சூரியனுக்கு உகந்த தானியமான கோதுமையை வைத்து செய்வது.
நம் வீட்டில் அருகில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு ஒரு கிலோ அளவு கோதுமை மாவு அல்லது கோதுமை தானியம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தானமாக வழங்க வேண்டும். இதன் மூலம் நமக்கு சூரிய பகவானின் அருளாசி கிடைத்து தொழில் வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்து நம் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் நவகிரக ஆலயத்திற்கு சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தை தானமாக தர வேண்டும். இது நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் நாளைய தினத்தில் நம் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு செங்காந்தள் மலர்களை சூட குடும்பத்தில் இருக்கும் சுப காரிய தடைகள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே போல் வெள்ளெருக்கு செடி இருந்தால் அதற்கு கொஞ்சம் மஞ்சளை தூவி அந்தச் செடியை சுற்றி வணங்கி வர வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்றாக கருதப்படுவது அன்னதானம் நாளைய தினத்தில் 11 பேருக்கு உங்களால் இயன்ற அளவு உணவு வாங்கிக் கொடுங்கள். இது உங்கள் குடும்பத்திற்கு என்றென்றும் நிலையான செல்வத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் அடைய முருகன் வழிபாடு
அக்னி நட்சத்திரம் முடியும் நாளான நாளைய தினத்தில் இவை எல்லாம் நாம் செய்யும் போது நம் குடும்பம் என்றென்றைக்கும் தழைத்து அனைத்து செல்வங்களையும் பெற்று நிம்மதியாக வாழும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து பலனடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.