- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர குரு ஹோரையில் செய்ய வேண்டியது

பணம் சேர குரு ஹோரையில் செய்ய வேண்டியது

- Advertisement -

பணத்தை சேர்க்க வேண்டும் பணத்தை அதிக அளவு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அப்படி சேமிக்க நினைத்தால் மட்டும் போதாது சேமிப்பை துவங்குவதற்கு கால நேரம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும். அது மட்டும் இன்றி அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பணத்தை சம்பாதிக்கிறோம் அதிலிருந்து எடுத்து சிறிது சேர்க்கப் போகிறோம். இதில் எதற்கு இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். நம் முன்னோர் காலத்தில் இருந்து சொன்ன ஒரு வாக்கு எதையும் நேரம் காலம் பார்த்து செய்யும் போது அது நல்ல முறையில் விருத்தியாகும். அதே போலத் தான் இதுவும். சேமிப்பு என்பது நம்முடைய வாழ்வாதாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது.

- Advertisement -

அப்படியான இந்த சேமிப்பை நல்ல முறையில் தொடங்கி சேமிக்க வேண்டுமெனில் அதற்கும் சில நேரம் காலம் உண்டு. அதைப் பற்றியதொரு அற்புதமான தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணம் சேர வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

ஹோரை தெரிந்தவன் ஒரு நாளும் சோறை போக மாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு. இதை அனைவரும் கேள்விப்பட்டும் இருப்பீர்கள். ஒரு நாளில் வரக்கூடிய ஹோரைகளை சரியான முறையில் பயன்படுத்தி வந்தோமே ஆனால் அவர்களுக்கு ஒரு நாளும் தோல்வி என்பதே கிடையாது என்பது தான் இதன் அர்த்தம். ஹோரைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் உண்டு.

- Advertisement -

இந்த ஹோரை என்பது என்ன?. ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் ராகுவுக்கும் கேதுவுக்கும் மட்டும் தனியாக ஹோரை கிடையாது. இவை இரண்டும் மற்றவற்றை சார்ந்தே இருக்கும். இந்த ராகு கேதுவை தவிர்த்து விட்டால் மொத்தம் ஏழு ஹோரைகள்.

அது ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் அந்த நாளுக்குரிய ஹோரையில் ஆரம்பிக்கும். உதாரணமாக வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாள். அன்றைய தினத்தில் காலை 6 – 7 சுக்கிர ஹோரை. சனிக்கிழமை 6 – 7 ஹோரை ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் அந்த கிரகங்களுக்கான ஹோரை முதலில் தொடங்கும் . அதன் பின் அடுத்தடுத்த ஹோரைகள் வரும்.

- Advertisement -

இதில் இப்பொழுது நாம் வியாழக்கிழமையில் வரக் கூடிய வியாழன் ஹோரையை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த ஹோரையில் தான் நாம் பணத்தை சேமிக்க தொடங்க வேண்டும். வியாழக்கிழமை காலை 6-7 , மதியம் 1-2, இரவு 8 – 9, இந்த மூன்று நேரங்களில் வரக் கூடிய ஹோரைகளில் இரவு வரக் கூடிய ஹேரையை தான் பணம் சேர்க்க நாம் பயன்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி குரு பகவானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாய்ப்பு உள்ளவர்கள் மரத்திலால் ஆன பெட்டியை தயார் செய்து கொள்ளுங்கள். முடியாதவர்கள் கண்ணாடியாலான பெட்டியை எடுத்து கொள்ளுங்கள். இதற்கு மூடி போட்டு பொருளை தான் எடுக்க வேண்டும்.

குருபகவானை மனதார நினைத்துக் கொண்டு நீங்கள் சேர்க்க நினைக்கும் பணத்தில் முதல் பணத்தை அந்த பெட்டியில் போடுங்கள். அத்துடன் மஞ்சள் நிற பூவையும் போட வேண்டும். ஏனெனில் குரு பகவானுக்கு மஞ்சள் நிறம் உகந்ததாக சொல்லப்படுகிறது. இத்துடன் கொஞ்சம் பச்சரிசியில் மஞ்சள் கலந்து அர்ச்சதை போல கலந்து அதையும் போடுங்கள்.

இப்படி போட்டு பணத்தை சேர்க்க பணம் அதில் பல மடங்கு சேர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்படுகிறது. நாம் பணம் சேர்க்க துவங்குவது அது சேர வேண்டும் என்று தானே. அதை இந்த முறையில் தொடங்கினால் நல்ல முறையில் சேரும் எனில் அதில் முயற்சி செய்வது தவறில்லை தானே.

இதையும் படிக்கலாமே: பணம் வீட்டில் குறையாமல் இருக்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்பு

ஆகையால் வியாழக்கிழமை வரும் வியாழன் ஹோரையில் இந்த முறையில் பணத்தை சேர்க்க துவங்கி நல்ல முறையில் பணத்தை சேர்த்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை காணுங்கள். இந்த நல்ல தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்