இந்த 1 பொருளை தொடர்ந்து தானம் கொடுத்து வந்தால், சகல தோஷமும் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே செல்லும்.

thaanam

வாழ்க்கையில், நம்முடைய அந்தஸ்தும் செல்வாக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களிடத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று தான் நம்மில் எல்லோரும் நினைப்போம். காசு பணம் சம்பாதிப்பதில் குறைவு இருந்தால் கூட, நம்மை சுற்றி இருப்பவர்களிடத்தில் நமக்கு இருக்கக்கூடிய அந்தஸ்தும் செல்வாக்கும் குறையக் கூடாது. ‘நமக்கு ஏற்படக்கூடிய அந்தஸ்திற்கு அவமானத்திற்கும், நாம் செய்த கர்ம வினைகளும் ஒரு காரணம்.’ நீங்கள் நன்றாக கவனித்தால் தெரிந்திருக்கும். சில இடங்களில், சில பேரை பார்த்து சொல்லுவார்கள்! காசு பணம் இல்லாவிட்டாலும், குணத்திலும் நன்னடத்தையும் இவர் உயர்ந்தவர் என்று! இப்படிப்பட்ட பெயரை நீங்கள் வாங்க வேண்டும் என்றாலும் சரி, உங்களுடைய வாழ்க்கையில் பணம் காசு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றாலும் சரி, சமுதாயத்தில் உங்களது அந்தஸ்து உயர வேண்டும் என்றாலும் சரி, சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது.

dhaanam

உங்களுடைய ஜாதக கட்டத்தில் தோஷம் ஏதாவது இருந்தாலும் சரி, உங்களுடைய ஜாதக கட்டத்தில் கிரகநிலை சரியில்லை என்றாலும் சரி, நவக்கிரகங்களால், இன்னல்கள் வராமல் இருக்க, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய இந்த ஒரு பொருளை நீங்கள் இயலாதவர்களுக்கு தானம் கொடுப்பது நன்மையைக் கொடுக்கும். அது என்ன பொருள்?

பொதுவாக சனிபகவானுக்கு உகந்தது என்றால் அது எள்ளு. எள் சம்பந்தப்பட்ட, எள்ளினால் சமைத்த பொருட்களை இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். எள்ளுருண்டை, எள் சேர்த்த கொழுக்கட்டை இப்படி உங்களால் என்ன முடியுமோ, அதை செய்து தானம் கொடுப்பது நல்லது. இந்தப் பொருட்களையெல்லாம் கோவிலுக்கு எடுத்துக்கொண்டு போய் அங்கு வருகை தரும் பக்தர்களுக்கும் தானம் கொடுக்கலாம்.

முழுக்க முழுக்க எள்ளிலிருந்து தயாரிக்கப்படுவது நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெய்யை நீங்கள் மாதத்திற்கு ஒரு முறையேனும் உங்களால் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அது சுத்தமான நல்லெண்ணெய் ஆக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. சிலபேருக்கு வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் வாங்கக்கூட காசு இருக்காது. சுத்தமான நல்லெண்ணை என்றால் கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

கஷ்டப்படுபவர்கள் வீட்டில் தீபம் ஒளிர்வதற்கு உங்களது கையால் நல்லெண்ணையை வாங்கிக் கொடுத்தால், அது உங்களுடைய வாழ்க்கைக்கையில் பெரிய அளவிலான நல்ல மாற்றங்களை தேடித்தரும். உங்களிடம் நல்லெண்ணெயை, தானமாகப் பெற்று, தீபம் ஏற்றுபவர்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாகும்.

nallennai

இதேபோல் பசுநெய்யை வாங்கியும் தானமாக கொடுக்கலாம். நெய் வாங்க எவ்வளவு பணத்தை நாம் செலவு செய்கிறோமோ, அந்த அளவிற்கு இரட்டிப்பாக வருமானம் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் தங்கியிருக்கும் ஆசிரமங்கள் விடுதிகள், இப்படிப்பட்ட இடங்களுக்கு உணவு சமைப்பதற்கு தேவையான நெய் வாங்கி கொடுப்பதும் மிகவும் நல்லது.

ghee

உங்களால் இதை எதுவுமே செய்ய முடியாது என்றாலும் கோவிலுக்கு சென்று மாதம்தோறும் வெறும் 1/2 லிட்டர் நல்லெண்ணெயாவது வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அவர் அந்த எண்ணெய்யை கொண்டு தினமும் இறைவனுக்கு தீபம் ஏற்றிவர, நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பித்து, தோஷங்கள் படிப்படியாக குறைய ஆரம்பித்து, தானாகவே நாம் இந்த சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு செல்வோம் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
ஒரே ஒரு வெள்ளைப்பூண்டு இருந்தால் உங்களுக்கு இருக்கும் செய்வினை, திருஷ்டிக் கோளாறுகள் ஒரே நாளில் நீங்கிவிடும் எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.