ஒரே ஒரு வெள்ளைப்பூண்டு இருந்தால் உங்களுக்கு இருக்கும் செய்வினை, திருஷ்டிக் கோளாறுகள் ஒரே நாளில் நீங்கிவிடும் எப்படி?

sleep-garlic

சிலருக்கு வாழ்க்கையில் திடீரென பிரச்சனைகள் அதிகரிக்கத் துவங்கும். எடுக்கும் எல்லா காரியங்களும் தோல்வியில் முடியும். உடலும், மனமும் எப்போதும் சோர்ந்து இருக்கும். என்னதான் செய்தாலும் இதில் இருந்து எப்படி மீள்வது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருப்போம். யாரும் செய்வினை வைத்தது போல் ஒரு உணர்வு நம்மை அறியாமல் நமக்குள் வரும். அவர்கள் இந்த எளிய விஷயத்தை செய்து பார்த்தால் செய்வினை, திருஷ்டி போன்றவைகள் உள்ளனவா? இல்லையா? என்பதும் தெரிந்து விடும். அப்படியிருந்தால் அதற்கான எளிய பரிகாரம் செய்து அதிலிருந்து மீண்டு விடலாம். அது எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்.

enemy

செய்வினை என்பது நமக்கு பிடிக்காதவர்கள் நம் மேல் இருக்கும் பொறாமையில் மனதிற்குள்ளேயே வார்த்தைகளால் வஞ்சிப்பது ஆகும். செய்வினை என்றவுடன் பில்லி, சூனியத்தில் செய்யப்படும் ஏதாவது ஒரு பொருளை வைத்து செய்யும் வேலை அல்ல. கெட்ட எண்ணத்துடன் நம்மை ஒருவர் நினைத்தால் அதுவும் செய்வினை தான். நாம் நன்றாக இருக்க கூடாது என்று நினைக்கும் நபர்கள் மனதிற்குள் நினைக்கும் விஷயங்கள் கூட வினையாக மாறும். இதையே செய்வினையும் செய்கிறது.

ஏதாவது ஒரு வகையில் நம்மால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது நம்மை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற பகைகளை வளர்த்துக் கொள்ளலாம். எப்படியாக இருந்தாலும் நம்மை பற்றிய எண்ணம் மோசமானதாக இருக்கும் பட்சத்தில் அது நம்மை வேறு விதமாக தாக்குகிறது. இதை திருஷ்டி என்றும் கூறலாம். சொத்துக்கள், உறவுகள் தொடர்பான விஷயங்களில் பெரும்பாலும் இது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

amavasai

நன்றாக இருந்தவர்கள் கூட திடீரென தனக்கு தானே பேசிக் கொண்டு பித்துப் பிடித்தவர்கள் போல் ஆகி விடுவார்கள். இவர்களுடைய இந்த மனநிலை அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அதிகமாக காணப்படும். இந்த தினங்களில் பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் மனநிலையில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் அதை அதிகமாக வெளிப்படுத்துகிறது. செய்வினை, திருஷ்டி போன்ற கோளாறுகள் நீங்க வீட்டில் நீங்கள் இரவு படுக்கும் முன் ஒரே ஒரு வெள்ளைப் பூண்டை தோல் உரித்து உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள்.

- Advertisement -

வெள்ளைப் பூண்டை நேரடியாக அப்படியே தான் வைக்க வேண்டும். எந்த பொருளையும் சுற்றி வைக்க கூடாது. காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அதன் நிறம் அல்லது குணம் மாறி இருந்தால், உங்களுக்கு செய்வினை, கண்திருஷ்டி போன்றவை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். வெள்ளையாக இருந்த பூண்டு அடர் மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும் அல்லது கருகிப் போய் இருக்கும். அப்படியும் இல்லை என்றால் பூண்டு காய்ந்து சுருங்கிப் போய் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு மாற்றம் தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு இது போன்ற பாதிப்புகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

garlic-poondu

இந்த மாற்றங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும், அந்த பூண்டை மறுநாள் ஓரமான ஒரு இடத்தில் வைத்து எரித்து பஸ்பம் ஆக்கி விடுங்கள். இப்படி உங்களுக்கு செய்வினை, கண்திருஷ்டி போன்றவைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் குடித்து பாருங்கள். ஐந்து நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும். உங்களுக்கு இருக்கும் இது போன்ற திருஷ்டிகள் அனைத்தும் நீங்கிவிடும். கடுகு எண்ணைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் மாதம் ஒரு முறை இப்படி செய்து பார்த்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா? ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.