உங்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும், பணகஷ்டம் வராமல் இருக்க, உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டினை செய்தாலே போதும்.

sukkiran

நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும் பணகஷ்டம், பணவிரயம் என்பது வரவே கூடாது. தேவைக்கு ஏற்ப கைக்கு பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பணம் சம்பாதித்துக் கொண்டே கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம். சில பேருக்கு கையில் நிறைய பணம் இருக்கும். ஆனால் அந்த பணத்தை வைத்து அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது. ஒரு வீடு, ஒரு வாகனம் வாங்க முடியாமல் தவித்து வருவார்கள். அவர்களுக்கு எதுவுமே சரியாக அமையாது. மணவாழ்க்கை அமையாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். ஆனால் பணம் மட்டும் கையில் இருக்கும். இப்படி பணம் இருந்தும் கஷ்டப்பட்டு வருபவர்கள் இன்னொரு பக்கம். இப்படி கஷ்டம் என்ற ஒன்று மனிதர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துதான் வருகின்றது. நம்முடைய வாழ்க்கையை இனிமையாக சந்தோஷமாக அமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.

sukran

வெள்ளிக்கிழமை அன்று பின்வரும் முறைப்படி மகாலட்சுமியையும், சுக்கிர பகவானையும் வழிபடவேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இந்த வழிபாட்டினை செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரமும், நல்ல நேரமாக மாறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. சரி, அந்த சுலபமான, நம்முடைய வாழ்க்கையை இனிமையாக மாற்றக்கூடிய வழிபாட்டு முறையை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உங்களுடைய வீட்டில் மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் நினைத்து ஒரே ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும், அல்லது இரண்டு தீபங்கள் ஏற்றலாம். அது உங்களுடைய இஷ்டம். ஆனால் கட்டாயம் நெய் ஊற்றி அந்த தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு மகாலக்ஷ்மியை மனதார வேண்டி உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இந்த இறை வழிபாட்டை செய்து முடித்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வெள்ளை நிற பூக்களால் உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு பணம் இருந்தும் சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் வரவில்லை, நல்ல திருமண வாழ்க்கை அமைய வில்லை எனும் பட்சத்தில் சுக்கிரபகவானுடன் சேர்ந்து அதே வெள்ளிக்கிழமை தினத்தில், செவ்வாய் பகவானையும் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். நவக்கிரகங்களில் இருக்கும் சுக்கிர பகவான் செவ்வாய் பகவான்.

mahalakshmi

முடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று ஒரு முறை பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் திருமண தடைக்கு எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் தரிசனம் செய்தால் அது விலகி விடும்.

srirangam perumal

நிறைய பணம் வைத்தும் நல்ல வரன் அமையாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், உங்களால் இயன்ற அளவு உதவியை, கஷ்டப்பட்டு வரும் குடும்பத்திற்கு செய்துவரவேண்டும். உங்களுக்கு வசதி இருக்கும் பட்சத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வஸ்திர தானம் செய்யலாம். சுவர்ண தானம் செய்யலாம். அல்லது உங்களால் முடிந்த ஒரு தொகையை அந்த பெண்ணின் திருமண காரியத்திற்காக செலவு செய்யலாம். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு சீக்கிரமே நல்ல வரன் அமையும்.

Hindu Marriage

கோவில்களில் இறைவனுக்கு நடக்கக்கூடிய திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வது நன்மையை தரும். மேல் சொன்ன சுலபமான வழிபாட்டு முறைகளை பின்பற்றி வந்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல மாற்றங்கள் வரும். பூஜைகள் புனஸ்காரங்கள், தான தர்மங்களை செய்து வந்தாலும், வாழ்க்கையில் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால் அந்தக் கஷ்டங்களின் மூலம் பெரியதாக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. முயற்சி செய்து பாருங்கள்.