நண்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை – சாய் பாபா பாடல்

Sai baba padal

நண்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை என்று தொடங்கும் அற்புதமான சாய் பாபா பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாடல் வரிகள் முழுவதும் கீழே உள்ளது. இந்த பாடலை ஆப் லைன் மோடில் டவுன்லோட் செய்துகொண்டு எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தையும் சாய் நெருப்பில் போட்டு எரித்து மனதில் அமைதியை உண்டாக்கும் அற்புதமான சாய் பாபா பாடல் இதோ.

சாய் பாபா பாடல்:

சாய் பாபாவின் பிற பாடல்களை கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள்

சாய் பாபா பாடல் வரிகள்:

நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை (2 )
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை (2 )
நம்பி பாருங்கள்…

- Advertisement -

சாயிராமை போயி பார்த்து பேசுங்கள்
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள் (2 )
ஞான தங்கம் அவரும் தருவார்
ஞானம் தெளிவு வந்து விடும் (2 )
மூட பழக்கம் நீங்கி விடும்
நம்பி பாருங்கள்…

கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள் (2 )
புதிய வாழ்வும் புதிய வழியும் கண்ணிமைக்கும் நேரத்திலே
கிடைக்கும் சாயி பார்வையிலே
நம்பி பாருங்கள்…

ஊளி தரும் எசமான் சாயிராம்
துவரகமாயியிலே புது அன்னமிடும் (2 )
தாயின் உள்ளம் சாயி பிரபு
தாமரை பூ சாயி பாதம் (2 )
சாயி வார்த்தை சுப்ரபாதம்
நம்பி பாருங்கள்…

English Overview:
Believe in Sai baba song and its lyric is added here. This Sai baba padal is really very special to hear. It has beautiful lyrics like Sai baba’s heart is like Mother’s heart and so on.