எவ்வளவுதான் தோல்வி அடைந்தாலும், நம்முடைய அருகில் நமக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு ஒருவர் இருந்தால் போதும். தோல்வியை எல்லாம் கடந்து, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். ராமருடைய வெற்றிக்கு பின்னால்பக்க பலமாக இருந்தது, அனுமனுடைய தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம்.
ராமருக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, அதை சரி செய்ய ஹனுமன் ஓடோடி வந்துவிடுவார். ராமனுக்கு பக்க பலமாக இருந்து சீதையை காப்பாற்ற உதவியாக இருந்தவரே இந்த அனுமன் தானே. அனுமனின் மன உறுதியும், பலசாலிதனமும் யாருக்கும் வராது.
இக்கட்டான சூழ்நிலையில் நெருக்கடியான சூழ்நிலையில், உங்களையும் உங்கள் மனதையும் பலப்படுத்திக் கொள்ள செய்ய வேண்டிய அனுமன் வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மன உறுதி தரும் ஹனுமன் வழிபாடு
தினமுமே காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு கொஞ்சமாக செந்தூரத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரித்து அனுமனை வழிபாடு செய்து வர உங்களுடைய மன தைரியம் அதிகரிக்கும். இதை தினமும் செய்து வாருங்கள். எந்த சூழ்நிலையிலும் நிறுத்தாதீர்கள்.
சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் தொடர்ந்து ஹனுமன் கோவிலுக்கு சென்று அனுமனை மூன்று முறை வளம் வாருங்கள். அனுமன் சன்னிதானத்தில் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லி அனுமனை வழிபாடு செய்யுங்கள் உங்களுக்கான நல்லது சீக்கிரம் நடக்கும்.
இதோட சேர்த்து இன்று ஒரு அற்புதமாய் இந்த ஹனுமன் மந்திரத்தையும் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம் தவறு கிடையாது. முடியாதவர்கள் பிரச்சனைகள் சிக்கிக் கொண்ட தருணத்தில் ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லுங்கள் பிறகு இந்த 2 வரி மந்திரத்தை உச்சரிக்கும் போது நின்ற இடத்தில் இருந்தே நீங்கள் ஹனுமன் பலத்தை பெறுவீர்கள்.
ஹனுமன் மந்திரம்
ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே
ஸ்ரீ ராம் தூதாய நமஹ
இந்த மந்திரத்தை மனமுருகி நீங்கள் உச்சரித்தால் ராமனுக்கு தூதுவனாக சென்ற அனுமன் உங்களுக்கும் உதவி செய்ய தூதுவனாக வருவார் என்பது தான் நம்பிக்கை. உங்களுடைய பிள்ளைகள் மன தைரியம் இல்லாமல் கோழையாக இருந்தால் அவர்களையும் இந்த மந்திரத்தை உச்சரிக்கச் சொல்லுங்கள். நாளடைவில் அவர்கள் பலசாலியாக மாறிவிடுவார்கள்.
இதையும் படிக்கலாமே: சந்தோஷம் நிலைத்திருக்க விநாயகர் தீபம்.
கோழையாக இருக்கும் பிள்ளைகளிடத்தில் ஹனுமனது பெருமையை எடுத்துச் சொல்லி, அனுமனது பலசாலித்தனத்தை கதையாக சொல்லும் போது அவர்களுக்குள் புதிய மன தைரியம் பிறக்கும் என்பதும் நம்பிக்கை. உங்களுக்கு மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.