உங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

Astrology

உங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய தெய்வம் எது என்று தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலபேர் ஜாதகப்படி தங்களுடைய பெயரை வைத்திருப்பார்கள். சிலபேர் ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய பெயரை, ஜாதகத்தில் ஒரு பெயர், அழைப்பது ஒரு பெயர் என்று வைத்துக் கொள்வார்கள்! உங்களை மற்றவர்கள் என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்களோ, அந்த பெயரின் முதல் எழுத்தை வைத்தே, அந்த தெய்வத்தை நீங்கள் வழிபடலாம். சிலபேருக்கு ஜாதகமே எழுதியிருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த பதிவு உபயோகமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

astrology

உங்களுடைய பெயர் A, I, J, Q, Y என்ற எழுத்தில் ஆரம்பித்தால் நீங்கள், சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது, சிவனை மனதார நினைத்து, சிவனின் பெயரை உச்சரிப்பது அதிகப்படியான நன்மையைத் தேடித் தரும். தன்னை, அடுத்தவர்கள் எப்போதுமே, மரியாதையோடு நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், மரியாதை இல்லாத இடத்தில் கட்டாயம் இருக்க மாட்டார்கள்.

B, K, R இந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள், சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு  அழகாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தினம்தோறும், இறை வழிபாட்டில் பெருமாளின் பெயரை உச்சரிப்பது நல்ல பலனை தேடித்தரும். எந்த காரியத்தை தொட்டாலும் அது உடனே வெற்றியில் முடிய வேண்டும் என்று நினைக்கும் குணம் இவர்களிடம் உண்டு.

guru-bhagavan

C, G, L, S என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள், குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். தினம்தோறும் இறைவழிபாட்டில், இவர்கள் முருகரை நினைத்து, முருகரின் பெயரை உச்சரித்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். அடுத்தவர்களுக்கு உபதேசம் பண்ணுவதில் திறமை வாய்ந்த இவர்கள், எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். பின்னால் வருவதை, முன் கூட்டியே யூகிக்கும் திறமை இவர்களிடம் உண்டு.

- Advertisement -

D, M, T என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ராகுவின் அம்சம் கொண்டவர்கள். இவர்கள் தினசரி வழிபாட்டில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபட வேண்டியது அவசியம். எடுத்த காரியத்தை நிறைவேற்றும் திறமை இவர்களிடத்தில் இருக்கும். சுறுசுறுப்பாக வெற்றியை சீக்கிரமே தொட்டு விடுவார்கள்.

pudhan-bagavan

E, N, H, X என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் புதன் பகவானின் அம்சத்தில் பிறந்தவர்கள். தினம் தோறும் விநாயகரின் பெயரை உச்சரித்து வழிபாடு செய்வது இவர்களுக்கு நல்ல பலனைத் தேடித்தரும். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதியதாக, அதிகப்படியான விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்கள் இடத்தில் இருந்து கொண்டே இருக்கும். விஷ்ணுவையும் மகாலட்சுமி தாயாரையும் சேர்ந்து வழிபடுவது இவர்களுக்கு சிறப்பான பலனை தேடித்தரும்.

mahalakshmi

U, V, W என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள், சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட இவர்கள், தினம்தோறும் இறை வழிபாட்டின் போது மகாலட்சுமியின் பெயரை உச்சரிப்பது அதிகப்படியான பலனை தேடித்தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நன்றாகத்தான் இருப்பார்கள் அல்லவா?

vinayagar-3

O, Z கேது பகவானின் அம்சத்தைக் கொண்ட இவர்கள். தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு ஏதாவது ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டே இருப்பார்கள், விநாயகர் வழிபாடு இவர்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

hanuman-lingam1

F, P சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், பேச்சில் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் பேசி, விவாதம் செய்து ஜெயிக்கவே முடியாது. யாராலும் சாதிக்க முடியாத ஒரு விஷயம் எதாவது இருக்கிறது, அதை கொண்டு போய், இவர்களது கையில் கொடுத்தால், சாதித்தே தீருவார்கள். விடாமுயற்சி இவர்களிடத்தில் இருக்கும். தினந்தோறும் வழிபாட்டில் ஹனுமன் பெயரை உச்சரிப்பதால் உங்களுக்கு நன்மை நடக்கும்.

இதையும் படிக்கலாமே
திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.