நாளை நரசிம்ம ஜெயந்தி! கடன் சுமைகள், கஷ்டங்கள் படிப்படியாக குறைய, நரசிம்மரை எந்த மந்திரத்தை சொல்லி, எப்படி விரதம் இருந்து, எந்த நேரத்தில், வழிபட வேண்டும்?

lakshmi-narasimma

தீராத கடன் சுமை உள்ளவர்கள், தீராத உடல் உபாதைகளை கொண்டவர்கள், தீராத கஷ்டத்தால் அவதிப்பட்டு வருபவர்கள், அனைவருமே நாளை வரக்கூடிய நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபாடு செய்து பலன் அடையலாம்.  நாளை எந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட வேண்டும், எந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும், எந்த நிவேதனத்தை பிரசாதமாக வைக்க வேண்டும், என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் நாளை வரக்கூடிய நரசிம்மர் வழிபாட்டை அனைவரும் மேற்கொள்வது நன்மையை தரும்.

பொதுவாகவே நரசிம்மரின் அவதாரம் பற்றிய வரலாறு நாம் எல்லோரும் அறிந்ததே. நாளை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்வோம். வழக்கம்போல இன்றைய நாள் எல்லோரது வீட்டையும் சுத்தம் செய்து, துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணி அளவில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு நரசிம்மரை மனதார வேண்டி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும்.

எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்க முடிந்தவர்கள், சாப்பிடாமல் விரதம் இருக்கலாம், பால் பழம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். சூழ்நிலை சரியில்லாதவர்கள் வேலை வேலைக்கு சாப்பிட்டும் நரசிம்மரை வழிபாடு செய்யலாம். அவரவர் உடல் சூழ்நிலையை பொருத்தது. நரசிம்மர் அவதரித்த நேரம் சந்தியா காலம் என்பதால் நரசிம்மர் பூஜையை நாளை மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் செய்து முடித்துவிட வேண்டும்.

paanagam

பெரும்பாலும் எல்லோரது வீட்டில் நரசிம்மரின் திருவுருவப்படம் இருக்காது. இருப்பினும் பெருமாளின் படம் நாம் எல்லோரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும். நரசிம்மர் பெருமாளின் அவதாரம் என்பதால் பெருமாளுக்கு உங்களுடைய வீட்டில் துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இப்போது லாக்டோன் காலம் என்பதால் குறிப்பிட்ட பூக்களை சொல்லி நம்மால் வெளியே சென்று வாங்க முடியாது. உங்கள் வீட்டில் என்ன பூ இருக்கின்றதோ, அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பூவே இல்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

அடுத்தபடியாக நரசிம்மருக்கு கட்டாயமாக பானகம் அல்லது நீர் மோர் நிவேதனமாக வைக்கவேண்டும். பானகம் தயாரிப்பதற்கு வீட்டிலேயே பொருட்கள் இருக்கும். பானகம் தயாரிப்பதற்கு கூட வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் கட்டாயம் தயிர் எல்லோர் வீட்டிலும் இருக்கும். அந்த தயிரை நீர் மோராக மாற்றி, நிவேதனமாக வைத்து விடுங்கள்.

butter-milk

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கீழே ஒரு பாயைப் போட்டு அமர்ந்து, மனதார கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, நரசிம்மருடைய ருணவிமோசன ஸ்தோத்திரத்தை ஒரே ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். இதோ அந்த மந்திரம் உங்களுக்காக!

narasimmar

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்
ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

2. லஷ்மியாலிங்கித வாமாங்கம்
பக்தானாம், வரதாயகம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

3. ஆந்த்ர மாலாதரம் சங்க,
சக்ராப்ஜாயுததாரினம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

5. ஸிம்ஹ நாதேன மஹதா
திக்தந்தி பய நாஸனம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

narasimmarl

6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
தைத்யேஸ்வர விதாரணம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

7. க்ரூரக்ரஹை பீடிதானாம்
பக்தானாமப்யப்ரதம்
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே

8. வேத வேதாந்த யக்ஞேஸம்
 ப்ரஸ்மருத்ராதி வந்திதம்
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே

9. யஇதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்சஞிதம்
அந்ருணீஜாயதே ஸத்ய
தனம் ஸீக்ரமவாப்னூயாத்

vilakku-pray

மந்திரத்தை உச்சரித்து விட்டு, இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள், மாலை இந்த பூஜையை முடித்துவிட்டு உணவு அருந்த வேண்டும். பொதுவாகவே இந்த மந்திரத்திற்கு தீராத கடனையும் தீராத கஷ்டத்தையும் போக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. அதிலும் நாளைய தினம் நரசிம்ம ஜெயந்தி அன்று மந்திரத்தை உச்சரித்து நரசிம்மரை வழிபடுவதன் மூலம், இந்த பூஜையின் சக்தி பல மடங்காகப் பெருகும். நாளை இந்தப் பூஜையை தொடங்கி, அதைத்தொடர்ந்து 48 நாட்கள் நரசிம்மரை நினைத்து இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுபவர்களுக்கு தீராத கஷ்டமும் தீராத கடன் சுமையும் படிப்படியாக குறைவதை கண்கூடாக உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.