வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியும், சுவாதி நட்சத்திரமும், பிரதோஷ காலமும் சேரக்கூடிய சேரக்கூடிய நேரத்தில்தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படும். இதன் அடிப்படையில் இந்த வருட நரசிம்ம ஜெயந்தி 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட வேண்டுமா? அல்லது 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட வேண்டுமா? என்ற குழப்பம் நரசிம்மர் பக்தர்களுக்கு இருக்கிறது.
அதை தெளிவுப்படுத்தும் வகையில் நரசிம்மர் ஜெயந்தி என்று கொண்டாட வேண்டும் என்பதை பற்றிய தகவலையும், இதோடு சேர்த்து நரசிம்மர் வழிபாட்டை பற்றிய தகவலையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நரசிம்மர் ஜெயந்தி 2024
21.5.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:39 மணி முதல் 22.5.2024 புதன்கிழமை மாலை 6:48 மணி வரை சதுர்த்தசி திதி இருக்கிறது.
21.5.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5:47 மணி முதல் 22.5.2024 புதன்கிழமை காலை 7:46 மணி வரை தான் துவாதசி திதி இருக்கிறது.
இந்த நேரத்தின் அடிப்படையில் பார்த்தால் 21.5.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில்தான் சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம், பிரதோஷ காலம் இந்த மூன்றுமே சேர்ந்து வருகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை மாலை நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பஞ்சாங்கத்திலும் இதுதான் கொடுக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் புதன்கிழமை காலை நரசிம்மருக்கு விசேஷ பூஜைகளும் அபிஷேகங்களும் நடக்கவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிக்குள் இந்த பூஜையை செய்து நிறைவு செய்து கொள்ளலாம். நாளை மாலை பூஜையாறையில் இருக்கும் பெருமாள் படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். துளசி இலைகளால் அலங்காரம் செய்வது சிறப்பு. பெரும்பாலும் லட்சுமி நரசிம்மரை வீட்டில் வைத்து வழிபாடலாம் தவறு கிடையாது.
நிறைய பேர் வீட்டில் லட்சுமி நரசிம்மது திருவுருவ படம் இருக்காது. அதனால் பெருநாளுக்கே வழிபாடு செய்யுங்கள். தவறு ஒன்றும் இல்லை. லட்சுமி நரசிம்மரை மனுதாரர் நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு 1 டம்ளர் நீர்மோர் பானகம் தயார் செய்து வைக்க வேண்டும்.
சுத்தமான குடிக்கின்ற தண்ணீரில் எலுமிச்ச பழச்சாறு, வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பானகத்தை தயார் செய்து அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு நெய்வேதியமாக வைத்து விடுங்கள். இது தவிர சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வேறு எந்த பிரசாதம் செய்து வைப்பது உங்கள் சௌகரியம்.
லட்சுமி நரசிம்மரின் நினைத்து பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய கடன் தொல்லை நீங்க வேண்டும், எதிரி பிரச்சினையில் இருந்து வெளிவர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நரசிம்மரது ஏதாவது மந்திரம் தெரியும் என்றால் அதை உச்சரிக்கலாம்.
மந்திரம் தெரியாது என்பவர்கள் ‘ஓம் நரசிங்க பெருமானே போற்றி போற்றி’ எந்த மந்திரத்தை சொல்லி இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு உங்களுடைய கஷ்டங்களை உடனே போக்கக்கூடிய வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நரசிம்மரிடம் நாளை என்ற வார்த்தை இல்லை. கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள் பாவித்து செல்வார் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு
இது தவிர உங்கள் வீட்டு பக்கத்தில் லட்சுமி நரசிம்மர் சன்னிதானம் இருக்கிறது. அங்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது என்னும் பட்சத்தில் அந்த கோவிலுக்கு சென்று நரசிம்மர் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் செய்யுங்கள். நரசிம்மர் கோவிலில் இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது உங்களுக்கான நல்ல பலனை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.