நடக்காததை கூட நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் உங்களுக்காக! இந்த மந்திரத்தை மனமுருகி தினமும் 3 முறை உச்சரித்தாலே போதும்.

narasimar

நம்முடைய வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நாம் முடிவு செய்து வைத்திருக்கும் சில விஷயங்களைக் கூட, நம்பிக்கையான வேண்டுதலை வைக்கும்போது அந்த இறைவன் அதை நடத்திக் காட்டுவார். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கஷ்டத்திற்கும் நிச்சயம் தீர்வு உண்டு‌‌. அந்த தீர்வானது உங்களை வந்து அடைய, சிறிது காலதாமதம் ஏற்படும். அவ்வளவு தான். அந்த காலதாமதம் எதனால்? நீங்கள் செய்த கர்மவினைகளின் பலனை, நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி. எவரொருவர் இறைவனின் பாதங்களை தொடர்ந்து பற்றிக் கொண்டு, இறை வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு விடிவு காலம் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

பக்தருக்கு ஒரு பிரச்சனை என்றதும், தூணில் இருந்து உடனடியாக அவதாரமெடுத்து வந்தவர் நரசிம்மமூர்த்தி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! கோபத்தோடு இந்த பூமியில், பக்தர்களுக்காக அவதாரம் எடுத்த தெய்வங்களுக்கு எப்போதுமே ஒரு அதீத சக்தி உண்டு என்று சொல்லுவார்கள். ஆம், பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் இளகிய மனமும் இந்த ஆக்ரோஷமான தெய்வங்களிடம் உண்டு. ஆனால் தவறு செய்தால், தண்டனையும் கண்டிப்பாக உண்டு. இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த வரிசையில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இந்த பூமியில் சிங்க முகத்துடனும், மனித உடலுடன் அவதாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீண்ட நாட்களாக உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறாத குறிக்கோள் இருந்தால், அதை நிறைவேற்றிக் கொள்ளவும், வீட்டில் இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகள் தீரவும், தீராத நோய் நொடிகள் தீரவும், தினம்தோறும் நரசிம்மரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். உங்களுக்கான நரசிம்மரின் மந்திரம் இதோ!

narasimmar-pragalathan

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

- Advertisement -

இது நரசிம்மரை பற்றி சமஸ்கிரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரம். உச்சரிக்க தெரிந்தவர்கள், மந்திரமாகவே உச்சரிக்கலாம். சமஸ்கிருதத்தில் உச்சரிக்கத் தெரியவில்லை எனும் பட்சத்தில், இதற்கான தமிழ் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு, தமிழில் வாசித்தாலும் மந்திரத்தை உச்சரித்த பலனை நம்மால் பெற முடியும்.

narasimmar

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!
உன் பாதங்களை சரணடைகின்றேன்!

narasimha 3

இப்படியாக நரசிம்மரை வேண்டி, இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். பயந்த சுபாவமாக, உள்ளவர்களுக்கும் மன பயம் நீங்கி, துணிச்சல் உண்டாகி, உங்கள் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியத்தை கூட, நடத்திக் காட்டும் அளவிற்கு அதிக சக்தி உங்கள் உடலுக்கும், மனதிற்கும் வரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.