இந்த மந்திரத்தை 9 முறை இப்படி உச்சரித்தால்! எந்த எதிரியும் உங்களை நெருங்கக்கூட முடியாது தெரியுமா?

narasimmar

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரமாக இருப்பது நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் உயிரைக் காக்க மனித உடலுடனும், சிங்க தலையுடனும் அவதாரம் புரிந்த நரசிம்மரை வேண்டி வணங்கினால் காரிய சித்தியாகும். எதிரிகளின் தொல்லை நீங்க இவரை வழிபடுவது நன்மை அளிக்கும். குறைவற்ற செல்வத்தையும் பெறுவதற்கு நரசிம்மர் உடைய மந்திரத்தை உச்சரித்தால் சிறப்பான பலன் உண்டாகும். நரசிம்ம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

narasimmar-pragalathan

எல்லா இடத்திலும் எதிலும் வெற்றி காண விரும்புபவர்கள் நரசிம்மர் உடைய இந்த மந்திரத்தை தினமும் 9 முறை உச்சரித்து வரலாம். ஒரு சிலருக்கு உத்தியோக ரீதியான எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். நீங்கள் முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்பார்கள். உங்கள் மீது பொறாமை பட்டு நீங்கள் எடுக்கும் விடாப்பிடியான முயற்சிகளில் தடையாக இருப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் விருத்தி பெறவும், தொழில் ரீதியான பகைவர்களின் சூழ்ச்சிகளையும் முறியடிக்க மகா அவதாரம் நரசிம்ம மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். தன் மீது அளவற்ற பக்தி கொண்டுள்ள எவரையும் இவர் கைவிடுவதில்லை. நரசிம்மர் பார்ப்பதற்கு உக்கிர தெய்வமாக இருந்தாலும் உண்மையில் உள்ளத்தில் குழந்தை மனம் படைத்தவர் என்கிறது ஆன்மீகம்.

narasimma-avatar

கூப்பிட்ட குரலுக்கு எவ்வித தடையும் இன்றி உடனே வந்து நிற்பார். இவர் ‘தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!’. எல்லாத் திசைகளும் இவருக்கு உரிய திசைகள் தான். விஷ்ணு அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் என்பது மிகப்பெரிய பலன்களை பக்தர்களுக்கு கொடுப்பதாக அமைந்துள்ளது. பொதுவாக உக்ர தெய்வ வழிபாடு வீட்டில் செய்யக்கூடாது. எனவே வீட்டில் நரசிம்மர் படத்தை வைத்து இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். ஆனால் நரசிம்மர் உக்கிர தெய்வம் அல்ல! பகைவர்களை அழிக்கும் சக்தியும், ஆற்றலும் பக்தர்கள் பெறுவதற்கு உக்கிரமாக தோற்றம் அளிக்கிறாரே தவிர மிகவும் சாந்த ஸ்வரூபமானவர் என்பது தான் உண்மை.

- Advertisement -

கீழ்வரும் நரசிம்மர் உடைய மூலமந்திரத்தை தினமும் உங்களுடைய பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படம் அல்லது பெருமாளுடைய படம் வைத்து உச்சரிக்க வேண்டும். படத்திற்கு துளசி மாலை சாற்றி, சந்தன, குங்கும திலகமிட்டு கையில் அட்சதை வைத்துக் கொண்டு தொடர்ந்து 9 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கையில் இருக்கும் அட்சதையை எடுத்து சாமி படத்தின் முன்பு போட்டு விட வேண்டும்.

narasimmar

நரசிம்மர் மூல மந்திரம்:
ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ!!

இப்படி செய்து விட்டு நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம். எல்லா வகையிலும் உங்களுக்கு தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சில துஷ்ட துரோகிகளை மற்றும் பகைவர்கள் தொல்லைகளை ஒழிக்க இதை விட சிறந்த பரிகாரம் எதுவுமே இருக்க முடியாது என்று கூறலாம்.

yoga narasimmar

வீட்டிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்திலும் பகைமையை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. ரத்த உறவுகளுக்கு இடையே இருக்கும் பகைகளை கூடுமானவரை தவிர்த்து கொள்வது நல்லது. மற்ற வெளியிடங்களில் உங்களுக்கு இருக்கும் எதிரிகள் மற்றும் பகைவர்களின் சூழ்ச்சியை பலிக்காமல் செய்ய நரசிம்மர் உடைய சன்னிதியில் இருந்தும் இந்த மந்திரத்தை 9 முறை தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டு உச்சரிக்கலாம்.