உங்களுக்கு உரிமையானவை தடை, தாமதங்களின்றி கிடைக்க உதவும் துதி இதோ

vishnu

நாம் அனைவருமே வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றாலும், குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி போன்றவை இல்லை என்றாலும், நியாயமாக உழைத்து, பிறரிடம் நியாயமாக நடந்தும் நமக்குரிய சில விடயங்கள் நமக்கு கிடைக்காமல் போவதாலும், நமக்கு மிகப்பெரும் மனச்சோர்வை உண்டாக்கிவிடுகிறது. வேண்டுவோர்க்கு அனைத்தையும் வழங்குபவர் நாராயணன். அவருக்குரிய நாராயணன் துதி துதித்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

Perumal

நாராயணன் துதி

ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய

ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்

vishnu

பெருமாளாகிய நாராயணன் துதி இது. இந்தத் துதியை தினமும் காலையில் 27 வரை துதிக்க வேண்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி இந்த மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வணங்குவதால் குடும்பத்தில் ஏற்படும் கஷ்ட நிலை நீங்கும். செல்வ சேர்க்கை அதிகரிக்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது அனைத்தும் தடை, தாமதங்கள் என்று உங்களுக்கே கிடைக்க பெருமாள் அருள்வார்.

- Advertisement -

Perumal

காக்கும் கடவுளாகிய பெருமாளுக்கு 1000 இற்கும் அதிகமான பெயர்களுண்டு. அந்த ஆயிரம் பெயர்களும் கொண்ட அற்புத ஸ்தோத்திர மாலை தான் விஷ்ணு சகஸ்ரநாமம். இத்தனை பெயர்களிலும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெருமாளின் பெயராக நாராயணன் இருக்கிறது. வாழ்வில் எந்த ஒரு நிலையிலும் நாராயணனாகிய பெருமாளின் பெயரை சொல்லி வழிபடுவர்களுக்கு எல்லாவித நன்மைகளையும் அருளுவார் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு.

இதையும் படிக்கலாமே:
மனக்குழப்பங்கள் நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Narayanan thuthi in Tamil. It is also called as Perumal manthirangal in Tamil or Vishnu slokas in Tamil or Mahavishnu mantras in Tamil or Kastangal theera manthiram in Tamil.