என்ன பரிகாரம் செய்தும் உங்கள் எண்ணம் ஈடேறவில்லையா? இந்த நட்சத்திர நாளில் இதை மட்டும் செய்தால் போதும் உங்கள் ஆசைகள் நிறைவேறும், துன்பங்கள் தூர விலகும்.

natchathiram pariharam
- Advertisement -

நாளும் கிழமையும் பார்த்தே நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நாம் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்றால், அந்த காரியத்திற்குரிய நட்சத்திரத்தில் செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும். அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் எந்தெந்த நட்சத்திரத்தில் எதை செய்யலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் வரும். அவ்வாறு வரும் நட்சத்திரத்தில் நம் பிரச்சனைக்கு ஏற்றவாறு கடவுளை வணங்கினால் நம் பிரச்சினைகள் தீரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் எப்பேர்பட்ட பிரச்சனையில் இருந்தாலும், அந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு கிடைப்பதற்கு மஹா கணபதியை வணங்க வேண்டும். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரம் கொண்ட நாட்களில் அவரை வணங்கினோம் என்றால் நம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த நட்சத்திர நாட்களில் நம் வீடுகளிலோ அல்லது அலுவலகத்திலோ மகா கணபதி ஹோமம் செய்யலாம், அல்லது “ஓம் மஹா கணபதியே நமஹ” என்று அந்த நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

நமக்கு செல்வங்கள் சேரவும், நிம்மதி கிடைக்கவும், நம்முடைய ஆசைகள் நிறைவேறும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் கொண்ட நாட்களில் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது மகாலட்சுமி ஹோமம் மேற்கொள்ளலாம்.

அரசு வேலை கிடைப்பதற்கும், பிரபலமாக ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திர நாட்களில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வணங்கி, “ஓம் ஆதித்ய நமஹ”, “ஓம் சிவாய நமஹ” என்று உச்சரித்தால் நமக்கு பதவிகள் நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

சிறந்த பேச்சாளராக விளங்க வேண்டும் என்றோ, வெளிநாடு செல்ல வேண்டும் என்றோ, வசீகர சக்தி அதிகரிக்க வேண்டும் என்றோ, முகம் தேஜஸ் ஆக இருக்க வேண்டும் என்றோ நினைப்பவர்கள் ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திர நாட்களில் “ஓம் பார்வதியே நமஹ”, “ஓம் உமா மகேஸ்வரியே நமஹ” என்று உச்சரிக்க வேண்டும். மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கி வர வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்றாலோ, இடத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றாலும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திர நாட்களில் முருகப்பெருமானை வணங்கி “ஓம் சரவணபவாய நமஹ” என்ற மந்திரத்தை கூறி வேண்டும். இதன் மூலம் மேற்சொன்னவை ஈடேறும்.

- Advertisement -

வேலையில் பதவிகள் கிடைக்க வேண்டும் என்றாலும், குடும்பம் செழித்து வாழ வேண்டும் என்றாலும், குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும் என்றாலும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும், முருகப்பெருமானையும் வணங்கி அவர்களின் நாமத்தை உச்சரித்து வர வேண்டும்.

நமக்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள் விளக்கவும், எதிரிகளின் தொந்தரவு அகலவும், நம்முடைய பிரச்சனைகள் தீரவும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் மகாவிஷ்ணுவை வணங்கி அவரின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

உடலில் ஏற்பட்டிருக்கும் சோர்வுகள் நீங்கவும், காரியத்தடை விலகவும், திருவாதிரை, சதயம், சுவாதி போன்ற நட்சத்திர நாட்களில் துர்கா தேவியை வணங்கி “ஓம் துர்க்கையே நமஹ” என்று கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரியால் எப்பவும் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்களா? இதை செய்தால் எதிரி தொல்லை நீங்கும்.

நன்றாக படிக்கவும், திறனாக பேசவும், தேர்வில் வெற்றி பெறவும் ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திர நாட்களில் “ஓம் புதாய நமஹ”, “ஓம் சரஸ்வதியே நமஹ” என்று கூறவேண்டும் அல்லது சரஸ்வதிக்குரிய ஹோமத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -