பொதுவாகவே சினிமா நடிகைகளை பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். காரணம் அவர்களுடைய சரும ஜொலி ஜொலிப்பு உடல் முழுவதும், அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த அழகு. கட்டாயம் அவர்கள் பியூட்டி பார்லருக்கு சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள். கூடவே இன்னும் சில விஷயங்களையும் பின்பற்றுவார்கள். சிலபேர் அவர்கள் அழகின் ரகசியத்தை வெளியில் சொல்வார்கள். சில பேர் அதை பற்றி எல்லாம் வெளியில் சொல்ல மாட்டார்கள். பெரும்பாலும் பிரபலியமாக இருப்பவர்கள் பயன்படுத்தும் பாடி ஸ்க்ரப்பை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். அழகான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.
செலவே இல்லாத பாடி ஸ்க்ரப் செய்முறை:
அதிகப்படியான செலவு இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் இந்த பாடி ஸ்க்ரப்பரை நாம் வீட்டிலேயே தயார் செய்துவிடலாம். இந்த பாடி ஸ்க்ரப் செய்ய தேவையான பொருட்கள் மூன்று. நாட்டு சர்க்கரை, சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழம். 1 பெரிய டம்ளர் அளவு நாட்டு சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு 1/2 கப் அளவு தேங்காய் எண்ணெய், 2 எலுமிச்சம் பழத்தின் சாறு தேவை. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்தால் ஒரு ஸ்க்ரப்பர் நமக்கு கிடைத்துவிடும். இந்த ஸ்க்ரப்பரை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி ஸ்டோர் செய்தால், 15 லிருந்து 20 நாட்களுக்கு கெட்டுப் போகாது.
இந்த பாடி ஸ்கிரப்பரை ரொம்பவும் தண்ணீராக செய்ய வேண்டாம். கொஞ்சம் திக்காக செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஸ்கிரப்பரை கையில் எடுத்து உடம்பில் பூசும் அளவுக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு வேலை தேங்காய் எண்ணெய் அதிகமாக ஊற்றி ஸ்க்ரப்பர் தண்ணீராக ஆகி விட்டால், கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும், அல்லது ரொம்பவும் ஸ்கிரப்பர் திக்காக இருந்தால் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். தவறு கிடையாது. ஆகவே அட்ஜஸ்ட்மென்ட் நம் கையில் தான் உள்ளது.
இந்த ஸ்க்ரப்பரை எப்படி பயன்படுத்தலாம். தினமும் இந்த ஸ்க்ரப்பரை உடம்பில் போடலாம். தவறு கிடையாது. உங்களுக்கு நேரம் இல்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட பயன்படுத்தலாம். பாட்டிலில் இருக்கும் ஸ்கரப்பரை உங்கள் உடல் முழுவதும் பூசி தேய்த்து குளிக்கும் அளவுக்கு, தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். சோப்பு போட்டு குளிப்பதற்கு முன்பாக உங்கள் உடல் முழுவதும் இந்த ஸ்க்ரப்பரை தடவி 15 நிமிடங்கள் ஜென்டில் ஆக மசாஜ் செய்ய வேண்டும்.
கழுத்து அக்குள் பகுதி இன்னும் உங்கள் உடம்புக்கு வெளியே தெரியாத பாகங்கள் எந்த இடத்தில் எல்லாம் கருப்பாக இருக்கிறது அந்த இடத்தில் முழுவதும் இந்த ஸ்க்ரபரை கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து போட்டு தேய்க்கலாம். உடல் முழுவதும் இந்த ஸ்க்ரப்பரை தேய்த்து வெறும் தண்ணீரை ஊற்றி குளித்துவிட்டு மீண்டும் தேவைப்பட்டால் சோப்பு போட்டு குளித்துவிட்டு உங்களுடைய சருமத்தை பாருங்கள். டெட் ஸ்கின் எல்லாம் நீங்கி உங்களுடைய சருமம் அப்படியே பளபளப்பாக மாறும்.
கடைகளில் விலை அதிகமாக எவ்வளவு பாடி ஸ்க்ரப்பர் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இது நம் கையாலேயே இயற்கையாக குறிப்பாக மலிவாக செய்யக்கூடிய நாட்டு சர்க்கரை பாடி ஸ்கிரிப். இது சருமத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்க வேணும்னா ட்ரை பண்ணி தான் பாருங்களேன். முகத்தில் மட்டும் அடிக்கடி ஸ்கிரப் செய்யாதீங்க. வாரத்தில் ஒரு நாள் முகத்திற்கு ஸ்கிரப் போட்டால் போதும். உடல் முழுவதும் இந்த ஸ்க்ரப்பரை தினமும் போட்டால் கூட தவறு கிடையாது. உங்களுக்கு இந்த எளிமையான மலிவான ஸ்க்ரப்பர் பிடித்திருந்தால் கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும்.