அடிக்கிற வெயிலுக்கு ஏசி வேணும்னு தோனுதா? இத மட்டும் செஞ்சா ஏசி வாங்காமலே வீட்ட குளிர்ச்சியா வெச்சிக்கலாம்.

air-conditoner1

‘கோடை வெயில் ஆரம்பம் ஆனாலும் ஆச்சு… வீட்ல இருக்கவே முடியல’ என்று புலம்பிக் கொண்டிருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான். பல வீடுகளில் இன்று ஏசி இருந்தாலும், பெரும்பாலான வீடுகளில் தற்போது ஏசி வாங்கும் நிலை இல்லை என்றே கூறலாம். ஏசி இல்லாதவர்கள் தங்கள் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது? கோடையின் தாக்கத்தில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

air-conditoner

ஏப்ரலில் துவங்கும் வெயில் காலம் ஜூன், ஜூலை வரை நீடித்து நம்மை பாடாய் படுத்திவிடும். இப்போது இருக்கும் நிலையில் வீட்டை விட்டு வெளியேறுவதும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அதற்காக வீட்டிற்குள்ளேயே இருந்தால் அவிந்து ஆம்ப்ளேட் ஆகி விடுவோம் போல் உள்ளது. வெயிலின் வெப்பத்தால் அனல் காற்று தகித்துக் கொண்டிருக்கிறது. இதனால் உடலில் இருக்கும் நீர்சத்து குறைந்து பல உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டை குளிர்ச்சியாக வைப்பதற்கு ஏசி தான் வேண்டும் என்று இல்லை. இயற்கையான முறையில் நம்முடைய வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

முதலாவதாக வீட்டை சுற்றிலும் மரங்கள் இல்லாதவர்கள் காலை 10 மணிக்கு மேல் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். அதனுடன் அடர்த்தி அதிகம் உள்ள விரிப்புகளை போடுவதும் நல்லது. வெயில் தாக்கம் குறையும் வரை திறக்கக் கூடாது. வீட்டை சுற்றி மரங்கள் இருக்கும் இடங்களில் மட்டும் கதவு ஜன்னல்களை திறந்து வைக்கலாம். ஜன்னல்களிலும், கதவுகளிலும் காட்டன் துணிகளை அல்லது கம்பளி துணியை தண்ணீரில் நனைத்து தண்ணீர் வடியாதவாறு பிழிந்து காயப்போட வேண்டும். ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக காய்ந்துவிடும். வீட்டிற்கு உள்ளையே வளர்க்கக்கூடிய செடிகள் நிறைய உள்ளன. அவற்றை வளர்த்தால் வீட்டின் உள்ளே குளிர்ச்சி உண்டாகும். அனல் காற்று குறையும்.

window-plants

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இதுபோன்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஈரத் துணியில் பட்டு வரும் காற்று வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதேபோல் வீட்டின் வாசலில் அகன்ற வாளியில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும் வாசல் வழியாக வரும் காற்று அந்த தண்ணீரின் மீது பட்டு அதனை தாண்டி உள்ளே வருமாறு இருக்க வேண்டும். சமையலை காலையிலேயே முடித்து கொள்வது நல்லது.

- Advertisement -

மாலை வேளையில் வீட்டில் இருக்கும் அனைத்து கதவு ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும். வீட்டின் நுழைவு வாயிலை கிரில் கேட் இருப்பவர்கள் திறந்து வைத்து தூங்கலாம். கிரில் கேட்டை மட்டும் பூட்டி வைத்தால் போதும். நீங்கள் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு டேபிள் ஃபேனை உங்களின் படுக்கை அறையில் ஜன்னலைப் பார்த்தபடி காற்று வெளியே போகுமாறு வைத்து சுற்ற விடவேண்டும். இதனால் உள்ளே இருக்கும் அனல் காற்று வெளியேறிவிடும். எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்திருப்பவர்கள் அதையும் ஓட விடலாம். பின்னர் உறங்கச் செல்லும் பொழுது ஆப் செய்துவிட்டு உங்களை நோக்கி டேபிள் ஃபேனை திருப்பி வைத்துக்கொண்டு அதற்கு கீழே வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் ஐஸ் கட்டிகளை போட்டு வைக்கலாம். அதனுடன் வெட்டிவேர் சிறிதளவு சேர்த்துக்கொண்டால் அந்த அறை முழுவதும் குளிர்ச்சி அடையும். இவற்றை சரியாக பின்பற்றாமல் இருந்தால் வீடு வெப்பமாக தான் இருக்கும்.

vettiver

டேபிள் ஃபேன் இல் இருந்து வரும் காற்று இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரின் மீது பட்டு வெட்டிவேரின் வாசத்துடன் நம்மை நோக்கி வரும் பொழுது நாம் குளிர்ச்சியாக உணரலாம். அந்தி சாயும் நேரத்தில் வீட்டை சுற்றிலும், வீட்டின் மொட்டை மாடியிலும் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். வீட்டை மட்டும் அல்லாமல் நம் உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் டீ, காபி போன்ற பானத்திற்கு பதிலாக நீர்மோர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை அருந்தலாம்.

buttermilk6

இதுவும் முடியாதவர்கள் முடிந்த அளவிற்கு தண்ணீரை குடிக்கவும். பெரிய பாட்டிலில் தண்ணீரை அடைத்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது குடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். தாகம் எடுத்தாலும் சமையலறைக்கு சென்று எழுந்துபோய் நீர் அருந்துவதற்கு நாம் சோம்பல் அடைவோம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சமயத்தில் அதிகமான திட உணவுகளை எடுத்துக் கொள்வதும், காரமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் தவிர்ப்பது நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் உங்களது ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு சமையறையில் இருக்கும் விதைகளே போதும் தோட்டம் போடுவதற்கு! வெளியில் சென்று காசு கொடுத்து விதை வாங்கும் அவசியம் கூட இல்லை.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Natural alternatives to air conditioning. Alternatives to air conditioning in homes. Natural ac for home. Natural ac in Tamil. Natural cooling methods.