முடி கருகருவென அடர்த்தியாக வளர கருஞ்சீரகமும், நெல்லிக்காயும் இப்படி மட்டும் பயன்படுத்தி பாருங்க அசந்து போவீங்க! அடி முடியை வெட்டி விடுவதால் முடி வளருமா?

nellikkai-jeeragam-hair
- Advertisement -

முடி கருகருவென்று அடர்த்தியாக இருந்தால் எல்லோருக்குமே பிடிக்கும். பள்ளி பருவம் வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஓரளவுக்கு நல்ல அடர்த்தியான கருகருவென்ற கருங்கூந்தல் இருந்திருக்க செய்யும். ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி இழந்து வந்து, குழந்தை பெற்ற பின்பு முழுமையாக அடர்த்தி குறைவதை பார்த்திருப்போம். இப்படி அடர்த்தி குறைந்த முடிக்கு இதை விட சிறந்த ஹேர் பேக் இருக்க முடியாது. அதை எப்படி நாம் தயாரிப்பது? எப்படி அப்ளை பண்ணுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

கரு கரு என அலைபாயும் கூந்தல் எல்லோருக்குமே கிடைத்தது கிடையாது. சிலருக்கு முடியின் நிறமே செம்பட்டையாக இருக்கும். இப்படி வெவ்வேறு நிறத்துடன் இருக்கும் முடியையும், கருகருவென அலைபாய செய்யக்கூடிய இந்த ஹேர் பேக் ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. இதில் தேவையான அத்தனை சத்துக்களும் நம் தலை முடியை வேர்க்காலில் இருந்து வலுவாக்கி நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலை கொடுக்கிறது.

- Advertisement -

சிலர் தலைமுடியின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும் பொழுது முடியை அடிக்கடி வெட்டி விடுவது உண்டு. இது போல அடிக்கடி முடி வெட்டும் பொழுது முடியின் கனம் குறைந்தது போல ஃப்ரீயாக தோன்றும். ஆனால் இது ஒரு மாயத் தோற்றமே ஆகும். தலைமுடியை அடிக்கடி வெட்டிக் கொள்வதால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும் என்பது உண்மை அல்ல! தலை முடியின் வேர்க்கால்களுக்கு கீழே இரண்டு அடுக்குகள் இருக்கும். அதில் அடிப்பகுதியில் பல்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இது தான் தலை முடியின் வளர்ச்சியை நிர்ணயம் செய்கிறது, எனவே அந்த பல்பு போன்ற அமைப்பை சீர் செய்யாமல் நீங்கள் அடி முடியை வெட்டுவதால் தலைமுடி வளரப்போவது இல்லை. அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துமே தவிர, தலை முடியை வளர செய்யாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தலை முடியின் அந்த பல்பு போன்ற பகுதி வரை சென்று சீராக்கி நம்முடைய தலைமுடி பிரச்சனையை முற்றிலுமாக சரி செய்து மீண்டும் புதிய முடியை வளர செய்யக்கூடிய அற்புதமான நேச்சுரல் ஹேர் பேக் தான் இது! முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளுங்கள். இதை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

பின்னர் மறுநாள் காலையில் ஊறிய கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் மூன்று பெரிய நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு சுத்தம் செய்து கழுவி, உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் நீக்கிவிட்டு சதை பற்றை மிக்ஸி ஜாரில் சேருங்கள். பின்னர் இதை நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் போது தண்ணீர் தேவைப்படும் பொழுது நீங்கள் சீரகம், வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அந்த தண்ணீரிலும் சத்துக்கள் இருக்கும், எனவே வீணாக்கி விட வேண்டாம். பேஸ்ட் போல அரைத்ததும் அதை மெல்லிய காட்டன் துணியில் சேர்த்து நன்கு கிரீம் போல வடித்து வழித்து எடுத்துக் கொள்ளுங்கள். சக்கைகளை தூக்கி போட்டு விடுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த ஹேர் பேக்கை நன்கு கலந்து தலை முடி முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். ஒரு அரை மணி நேரம் நன்கு தலையை கட்டிக் கொள்ளுங்கள். சீரகம் சேர்த்துள்ளதால் தலையில் நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தினுடைய குளிர்ச்சி நம்மை பாதிக்காது. இதனால் சளி பிடிக்க வாய்ப்புகள் இல்லை. அரை மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். இது போல வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள், முடியின் அடர்த்தி மற்றும் வலிமை அதிகரிக்கும் நல்ல கருகருவென ஷைனிங்கான முடியும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -