100% இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் கொசுவை விரட்ட இத ட்ரை பண்ணுங்க! இப்படி செய்தால் கொசு மட்டும் இல்லைங்க, வீட்டில் துஷ்ட சக்திகளும் ஓடிவிடுமாம் உங்களுக்கு தெரியுமா?

- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கவும், வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை துரத்தவும் பயன்படுத்தக்கூடிய இந்த ஒரு விஷயம் கொசுவை கூட விரட்டும் என்பதில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பச்சை இலை எரியுமா? என்று கேட்டால் எரியாது என்று கூறுவார்கள். ஆனால் இந்த மூலிகை இலை பற்றிக் கொண்டு எரிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அது மட்டும் அல்லாமல் இயற்கையான முறையில் கொசுவை விரட்ட என்ன செய்யலாம்? என்பதையும் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இயற்கையான முறையில் கொசுவை விரட்டுவதற்கு இதை விட சிறந்த வழிமுறை இருக்கவே முடியாது. நீங்கள் ஒடோமஸ்(ODOMOS) போன்ற கிரீம் வகைகள் உபயோகிப்பது நன்மை தரும். ஆனால் இது நீண்ட நேரம் பலனளிப்பதில்லை! மஸ்கிட்டோ கில்லர்கள் லிக்விட் வகையில் விற்கப்படுகிறது. இது நமக்கு சுவாச பிரச்சனையையும் ஏற்படுத்தக்கூடிய அபாயம் உண்டு. இத்தகைய செயற்கையான கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் என்ன செய்யலாம்?

- Advertisement -

உங்களிடம் ஒரு தேவை இல்லாத கப் அல்லது பாத்திரம் ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர், பீங்கான் கப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். அதில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒன்றை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். முழு சாம்பிராணியையும் பயன்படுத்த வேண்டாம். பாதியளவிற்கு உடைத்து கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். சாம்பிராணியில் இருந்து புகை வரும் பொழுது அதில் 10 வேப்பிலைகளை போட்டுக் கொள்ளுங்கள். வேப்ப மரத்திலிருந்து ஃப்ரெஷ் ஆக பச்சை வேப்பிலைகளை பறித்து சாம்பிராணி புகையின் மீது போட்டால் மேலும் அதிகமாக புகை வரத் துவங்கும்.

இந்த சாம்பிராணி புகையுடன் வேப்பிலைகள் எரியும் பொழுது ஒரு விதமான நாற்றம் வர ஆரம்பிக்கும். இது வீடு முழுவதும் பரவும் பொழுது ஒரு கொசு கூட வீட்டில் தங்கவே தங்காது. எல்லாம் வெளியில் ஓடிவிடும். இயற்கையான முறையில் எந்த விதமான ரசாயன கலவைகளும் இல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல் கொசுவை விரட்டக்கூடிய இந்த இயற்கை கொசு விரட்டியை நீங்களும் உங்கள் வீட்டில் இன்றே ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -

கொசுவால் உண்டாகக் கூடிய நோய்கள் ஏராளம்! இரவு நேரத்தில் கொசு தொல்லையால் தூங்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் இந்த கொசு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். இத்தகையவர்கள் மேற்கூறிய வழிமுறையை பயன்படுத்தலாம் அல்லது பேய் விரட்டி என்று கூறக் கூடிய இந்த மூலிகை இலையையும் பயன்படுத்தலாம். மூலிகை இலையின் பெயரே பேய் விரட்டி என்று இருக்கிறதே என்று தானே நினைக்கிறீர்கள்?

இந்த பேய் விரட்டி இலை துஷ்ட சக்திகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த இலையை திரி போல சுருட்டி கொள்ள வேண்டும். பின்னர் தீபத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெயில் இந்த இலையை தோய்த்து திரி போடுவது போல போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் பற்ற வைத்தால் நூல் திரியை விட சூப்பராக பற்றி கொண்டு எரியும். இதிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான வாசம் கொசுவிற்கு பிடிக்காது. இதனால் கொசு வீட்டில் ஒரு நிமிடம் கூட தங்காது, ஓடியே போய்விடும். பேய் விரட்டி மூலிகை துஷ்ட சக்திகளையும், பேயையும் விரட்டும் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு.

- Advertisement -