இந்த புகையைப் போட்டால், உங்கள் வீட்டுக்குள் ஒரு கொசு கூட, உள்ளே வராது. முக்கியமாக கட்டிலுக்கு அடியில்! ஒருவாட்டி இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. நம் வீட்டில் கொசுவின் தொல்லை அதிகமாகத்தான் இருக்கும். கதவு, ஜன்னல்களை, திறந்தவுடன் வீட்டிற்குள் நுழையும் கொசுக்கள், நம் வீட்டில் மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளும். குறிப்பாக அலமாரிகள், கட்டிலுக்கு அடிப்பகுதி, போன்ற இடங்களில் கொசு கட்டாயம் இருக்கும். நிறைய பேர் வீடுகளில், கொசுவை விரட்ட, கடையில் இருந்து வாங்கும் மிஷின்களையும், கொசு வத்தியையும் தான் பயன்படுத்துவார்கள்.

mosquito1

செயற்கையாக உருவாக்கப்படும் கொசுவிரட்டி மூலம், நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல வகையான பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட, மிக மிக சுலபமான ஒரு வழியை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி கட்டாயம் இருக்கும். அதைக் கொளுத்தி, ஒரு கிண்ணத்தின் உள்ளே வைத்துவிடுங்கள்! வேப்பிலைகள் நிறைய இடங்களில் சுலபமாகவே கிடைக்கின்றது. அந்த வேப்பிலையை எடுத்து வந்து, நான்கு கொத்தை உருவி, கம்ப்யூட்டர் சாம்பிராணி பொருத்தி வைத்திருக்கும், கிண்ணத்தில் போட்டு விட்டாலே போதும்.

sambarani

சாம்பிராணி வத்தி, புகையோடு இந்த வேப்பிலை வாசமும் கலந்து, உங்கள் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும். மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் இந்த புகையை போட்டு விடுங்கள். சிறிது நேரம் கட்டிலுக்கு அடியிலும், இந்த பாத்திரத்தை வைத்து விடலாம். அந்த புகையானது கட்டிலின் அடியில் பரவியதும், வேப்பில்லை வாசனை அந்த இடத்தில் ஒட்டிக் கொள்ளும். கொசுக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த இடத்தில் தங்காது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும், அடுத்த நாள் மாலை இதே போல் செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களது வீடு கொஞ்சம் பெரிய வீடாக இருந்தால், வாசல் பகுதியில் ஒரு கிண்ணத்தில் இப்படி செய்யலாம். பின் பக்கத்திலும், ஒரு கிண்ணத்தில் இப்படி செய்து வைக்கலாம். உங்கள் வீட்டிற்கு முழுமையான பாதுகாப்பை, இந்த புகையானது தரும் என்பதில் எந்த சந்தேகமே இல்லை.

Neem

சில பேருக்கு வேப்பிலை சுலபமாக கிடைக்காது. பரவாயில்லை, நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வேப்பிலை பொடியை வாங்கி, வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். வேப்பிலை பொடியை, சாம்பிராணி எரியும் போது, அதன் மேல் தூவி விட்டால் கூட, வீட்டில் கொசு தொல்லை இருக்காது. உங்கள் வீட்டில், கொட்டாங்குச்சி இருந்தால் கூட, அதில் தீ மூட்டி விட்டு, இவ்வாறு வேப்பிலையையோ அல்லது வேப்ப பொடியையோ போடலாம்.

நம்முடைய பாட்டிமார்கள் குடிசை வீட்டில் வசிக்கும் போதெல்லாம், தேங்காய் மட்டையை காயவைத்து, அதில் நெருப்பு மூட்டி, புகை போட்டு விடுவார்கள். அந்தப் புகையில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொண்டு வந்து போட்டு விட்டால், அந்த வீட்டுக்குள் கொசு போகாது. வீட்டை சுற்றிலும் கொசு இருக்காது. இப்படி செய்வதைப் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் கட்டாயம் பார்த்திருப்பார்கள்! கொசுவை விரட்டக் கூடிய சக்தி வேப்பிலைக்கு நிறையவே இருக்கிறது.

sambarani1

இயற்கையான இந்த முறையை உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்! மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும், பாதுகாப்பான கொசுவிரட்டி இதுதான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -