கொசுவினால் ஏற்படக்கூடிய நோய்கள் பெருகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை எளிதாக தாக்கக்கூடிய இந்நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, கொசுவை விரட்டியாக வேண்டும். கொசுவை விரட்டுவதற்கு பல்லாயிரம் வழிகள் இருந்தாலும், அதில் ஒன்று கூட சரிப்பட்டு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. லிக்விட்கள், ஊதுபத்திகள், விரட்டிகள் என்று விதவிதமாக கொசுக்களை விரட்ட கூடிய ரசாயன கலவைகளுக்கு கூட அஞ்சாத இந்த கொசுவை, எப்படி நம் வீட்டில் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களை வைத்து விரட்டி அடிப்பது? என்னும் ரகசியத்தை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கொசுவை விரட்டுவதற்கு சுருள் வர்த்தியில் ஆரம்பித்து, மேட், லிக்விட், இன்றைய நவீன ஊதுபத்தி வரை எல்லாமே ட்ரை பண்ணியாச்சு, எதுவுமே கை கொடுக்கவில்லை என்பவர்கள், கடைசியாக நாடுவது இயற்கை பொருட்களை தான். இயற்கையாக மூலிகை பொருட்களை கொண்டு கொசுக்களை விரட்டி அடித்தாலும், அது அந்த நேரத்திற்கு மட்டுமே வெளியேறும், மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இந்த முறையில் நீங்கள் முயற்சிக்கும் பொழுது நீண்ட நேரம் கொசுக்களை உங்களிடம் வராமல் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம். முதலில் இதற்கு வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடல் உப்பு அதாவது கல் உப்பு, கல் உப்பை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மசாலா டப்பாவில் இருக்கும் கடுகையும் சம அளவிற்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு பொடியுடன் மூன்றாவதாக நாம் சேர்க்க இருப்பது வேப்பம்பூ பொடி ஆகும். வேப்பம் மரத்திலிருந்து பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பூக்களை நன்கு வெயிலில் காயவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியையும் சம அளவிற்கு சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்து சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது தூப காலில் எரி தணல் உருவாக்கிக் கொள்ளுங்கள். பாதி கொட்டாங்குச்சியை கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து அதில் சிறிது நேரம் காண்பித்து தீ பற்றி எரியும் பொழுது தூப காலில் வையுங்கள். அது எரிந்து தணலை உருவாக்கி விடும். அதன் பிறகு எரியும் தணலில் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பொடியை சிறிதளவு தூவி விடுங்கள். மாலை 5 மணிக்கு ஒருமுறை இது போல தூவி விட்டு அதன் புகையை மூலை முடுக்குகள் என்று ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் காண்பியுங்கள். குறிப்பாக ஜன்னலுக்கு பக்கத்தில் காண்பிக்க மறக்காதீர்கள். திரைசீலைகளை அசைத்து காண்பியுங்கள்.
இதையும் படிக்கலாமே:
முடி நீண்டு வளர சீரம்
கட்டிலுக்கு அடியில், பாத்திரம் கழுவும் சிங்க் அடியில் என்று எங்கெல்லாம் கொசுக்கள் ஒளிந்து கொள்ளுமோ அங்கெல்லாம் காண்பியுங்கள். அதன் பிறகு கதவு, ஜன்னல்களை மூடி வையுங்கள். பிறகு அதே போல இரவு தூங்கும் முன்பு ஒரு முறை காண்பியுங்கள். இப்படி செய்தால் ஒரு கொசு கூட வீட்டில் அந்த புகையின் நெடிக்கு தாங்காது ஓடிவிடும். மேலும் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கற்பூரத்தை நொறுக்கி சேருங்கள். கற்பூரத்தின் வாசத்தில் கொசுக்கள் வராது என்று சொல்லுவார்கள். கற்பூர எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெயை சிறிதளவு கை, கால்களில் தடவினாலும் கொசுக்கள் கடிக்காது. குழந்தைகளுக்கு இது போல் தடவி விடலாம்.