- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி நீண்டு வளர சீரம்

முடி நீண்டு வளர சீரம்

- Advertisement -

பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலவு செய்து ஹேர் கேர் செய்வதற்கு சீரம் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். இன்றைய தலைமுறையினருக்கு ரசாயன கலவை உள்ள உணவுப் பொருட்களாலும், அனுதினமும் வேலையில் சந்திக்கும் டென்சனாலும் முடி உதிரும் பிரச்சனை இருக்கிறது. முடி உதிர்வதை கட்டுப்படுத்தி மீண்டும் அடர்த்தியான முடியை பெறுவதற்கு இயற்கையாகவே வீட்டில் எப்படி சீரம் தயாரிப்பது? என்னும் அற்புதமான அழகு குறிப்பு ரகசியத்தை தான் இப்பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, முடியை நீண்டு வளர செய்வதற்கு, நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும். முதலாவதாக உங்கள் முடியின் அடர்த்திக்கு ஏற்ப ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயம் உடல் உஷ்ணத்தை தனித்து, உடலை குளிர்ச்சியாக்கி, உஷ்ணத்தால் இழக்க கூடிய முடிகளை பாதுகாக்கிறது. இதிலிருக்கும் சத்துக்கள், தலைமுடிக்கு வழு சேர்கிறது.

- Advertisement -

பின்பு சமைக்கும் பொழுது வெங்காயத்தை பயன்படுத்துகிறோம். அந்த வெங்காயத்தின் தோலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு வெங்காயத்தின் தோலை எடுத்து வைத்தால் போதுமானது. வெங்காயம் தலைமுடி பராமரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. இது தலைமுடியை அழுக்குகள் சேராமல், வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து, முடியை வேகமாக வளர தூண்டுகிறது.

கடைசியாக இரண்டு கொத்து பச்சை கருவேப்பிலையை பயன்படுத்த இருக்கிறோம். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்த வெந்தயத்தை, அந்த தண்ணீருடன் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் எடுத்து வைத்துள்ள வெங்காயத்தின் தோலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கொத்து கருவேப்பிலையையும் உருவி சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு விடுங்கள். ஆறியதும் அதை வடிகட்டியால் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் தான் இயற்கையான தலைமுடி பராமரிப்புக்கு தேவையான சீரம்! வீட்டிலேயே எளிதான முறையில் நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம். பின் இதனுடன் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூவை சேர்த்து நன்கு நுரை வர கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்பொழுது இதை கொண்டு தலைக்கு நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பித்தளை பாத்திரங்களை சுலபமாக தேய்க்க டிப்ஸ்.

இது போல வாரம் ஒரு முறை புதிதாக பிரஷ்ஷாக சீரம் தயார் செய்து, அதனுடன் ஷாம்பூ கலந்து தலைக்கு அலசி வந்தால் தலைமுடி உதிர்வது நின்று, முடியானது வேகமாக வளர செய்யும். நீண்டு கருகருவென அடர்த்தியான கூந்தல் இதன் மூலம் உருவாகிறது. எவ்வளவு முடி கொத்து கொத்தாக கொட்டி வந்தாலும், இதை பயன்படுத்திய பிறகு சட்டென முடி உதிர்வது நின்று, மீண்டும் பேபி ஹேர்ஸ் வளர்வதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். இயற்கையான மூலப்பொருட்கள் என்பதால் இதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை, தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தி பயன் அடையலாம்.

சற்று முன்