- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர மார்கழி வெள்ளி பரிகாரம்

கஷ்டங்கள் தீர மார்கழி வெள்ளி பரிகாரம்

- Advertisement -

தெய்வ வழிபாட்டிற்காகவே பிறந்திருக்கக் கூடிய மாதம் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதத்தில் நாம் செய்யக்கூடிய பிரார்த்தனைக்கு சக்தி பல மடங்கு அதிகம். இந்த மாதத்தில் கோவிலுக்கு சென்று என்ன வேண்டுதல் வைத்தாலும் அது வெகுவிரைவில் பலிக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நாளை மார்கழி மாதத்தின் முதல், வெள்ளிக்கிழமை வரவிருக்கிறது.

நாளைகய தினம் கோவிலுக்கு செல்லும்போது, இந்த 1 பொருளை கையோடு எடுத்துச் செல்லுங்கள். அதை சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யுங்கள். மீண்டும் அந்த பொருளை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால், அந்த தெய்வமே உங்களுடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும்.

- Advertisement -

மார்கழி முதல் வெள்ளி பரிகாரம்

மார்கழி வெள்ளி பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை நடக்கக்கூடிய கோவிலுக்கு சென்று, இந்த பரிகாரத்தை செய்வது மிக மிக சிறப்பு. கோவிலுக்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய அந்த பொருள் 1 ரூபாய் நாணயம் தான். நாளை காலை வீட்டில் இருக்கும் பெண்கள் எழுந்து சித்தப்பாத்தமாக குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். மார்கழி வெள்ளி இதை செய்தால் வீட்டில் நிச்சயம் சுபிட்சம்.

அடுத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயத்தை வைத்து சுருட்டி முடிச்சு போட்டு உங்கள் குலதெய்வத்தை நினைத்து பூஜை அறையில் வையுங்கள். 5 நிமிடம் கண்களை மூடி உங்களுடைய கோரிக்கையை இறைவனிடம் சொல்லுங்கள். பிறகு இந்த முடிச்சை அப்படியே கொண்டு செல்லவும். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த கோவிலில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை நடக்கிறது என்று பாருங்கள்.

- Advertisement -

அந்த கோவிலுக்கு சென்று இந்த முடிச்சை குருக்களிடம் கொடுத்து இறைவனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து தரும்படி சொல்லுங்கள். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிறகு வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது இந்த முடிச்சை இறைவனின் பாதத்தில் இருந்து திரும்பவும் பெற்றுக் கொள்ளுங்கள். முடிச்சை கையில் வைத்துக்கொண்டே கோயிலை மூன்று முறை வளம் வந்து, நேராக வீட்டுக்கு வந்து இதை உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது பூஜையறை அறையிலோ பத்திரப்படுத்தி வையுங்கள்.

நிச்சயம் நீங்கள் வேண்டி வழிபாடு செய்த அந்த தெய்வம் உங்கள் கூடவே வரும். சிவன் அம்மன் பெருமாள் இப்படி எந்த கோவிலில் வேண்டும் என்றாலும் இந்த முடிச்சை வைத்து எடுக்கலாம் முருகர் கோவில் பிள்ளையார் கோவிலின் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பு மேல் சொன்ன அத்தனை விஷயங்களும் செய்து முடித்திருக்க வேண்டும். அடுத்த மார்கழி மாதத்திற்குள் உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்.

- Advertisement -

என்ன நினைத்து இந்த முடிச்சை நீங்கள் கட்டி வைத்திருக்கிறீர்களோ, அந்த கோரிக்கையை இறைவன் சீக்கிரம் நிறைவேற்றி வைப்பான். திருமண தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை கிடைக்க கடன் சுமை குறைய வருமானம் அதிகரிக்க, என்று என்ன வேண்டுதல் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி குபேர தேய்பிறை பஞ்சமி வழிபாடு.

வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த காணிக்கையை கொண்டு போய் குலதெய்வம் கோவிலில் செலுத்தி விட்டு வந்து விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம். இந்த எளிமையான பரிகாரத்தை இந்த மார்கழி மாதத்தில் செய்பவர்களுக்கு நிச்சயம் பல மடங்கு பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்