ஷாம்பூ தேவையில்லை, சீயக்காய் அரைக்க தேவை இல்லை கொத்துக் கொத்தாக இழந்த முடியை ஒரே மாதத்தில் மீண்டும் பெற இயற்கை ஷாம்பூ சுலபமாக எப்படி வீட்டிலேயே தயாரிப்பது?

hair-shampoo-powder
- Advertisement -

தலையின் வேர் கால்கள் வறண்டு போவதாலும், தலை முடி வளர்வதற்கு உரிய ஊட்டச் சத்துக்கள் இல்லாததாலும் ஏற்படக்கூடிய இந்த முடி உதிர்வு பிரச்சனையை ஒரே மாதத்தில் ரொம்ப சுலபமாக சரி செய்வதற்கு இயற்கையான முறையில் நாம் இப்போது ஒரு ஷாம்பூ தயாரிக்கப் போகிறோம். வீட்டில் சீயக்காய் அரைக்க நேரம் இல்லாதவர்கள் மற்றும் செயற்கை ஷாம்புகளை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரொம்பவே சுலபமாக தயாரிக்க கூடிய இந்த இயற்கை ஷாம்பூ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இயற்கை ஷாம்பு பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ – 5, ஊற வைத்த வெந்தயம் – அரை ஸ்பூன், செம்பருத்தி இலைகள் – 10, கருஞ் சீரகம் – ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன், தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி – ஒரு ஸ்பூன், வேப்பிலை பொடி – ஒரு ஸ்பூன், அரிசி வடித்த தண்ணீர் – தேவையான அளவு.

- Advertisement -

இயற்கை ஷாம்பு பவுடர் செய்முறை விளக்கம்:
தலைமுடியின் வேர்க்கால்கள் நல்ல ஒரு ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் அளிக்கக் கூடிய இந்த ஷாம்புவை தயாரிக்க முதலில் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூக்கள் தேவை. சிவப்பு செம்பருத்தி மற்றும் ஐந்து இதழ்களைக் கொண்டுள்ள செம்பருத்தியாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன் இலைகள் 10 என்கிற எண்ணிக்கையில் எடுத்து வந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கருஞ்சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். கருஞ்சீரகம் இயற்கையாகவே முடி வளரும் தன்மையை நன்கு தூண்டி விடக் கூடிய அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. மேலும் மிருதுவான கூந்தல் பெறுவதற்கு ஒரு தேக்கரண்டி அளவிற்கு சுத்தமான கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நெல்லிக்காய் பவுடர், வேப்பிலை பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பவுடர்களாக கிடைக்காவிட்டால் உங்களுக்கு இயற்கையாகக் கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் மற்றும் வேப்பிலையை சேர்த்துக் கொள்வது இன்னும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -

பின்னர் அதனுடன் ஊற வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நீளமான கற்றாழை மடல் ஒன்றை எடுத்து அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் ஜெல் ரொம்பவே நல்ல பலன்களைக் கொடுக்கும். அப்படி கிடைக்காவிட்டால் நீங்கள் கற்றாழை ஜெல் கடைகளில் இருந்தும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். கற்றாழை ஜெல்லை ஒரு சில முறை நன்கு அலசி சுத்தம் செய்த பின்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த எல்லாப் பொருட்களையும் நன்கு மிக்ஸியில் அடித்துக் கொள்ளுங்கள். இதற்கு தேவை என்றால் அரிசி வடித்த கஞ்சியை எவ்வளவு தேவையோ அவ்வளவு சேர்த்து நன்கு சீயக்காய்க்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த கலவையை தலை முடியின் வேர்களுக்கு நன்கு அப்ளை செய்யுங்கள். தலைமுடி முழுவதும் நன்கு தடவி தலைமுடியை கட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு நன்கு அலசி விடுங்கள். அதிகப்படியான எண்ணெய் தடவி இருக்கும் சமயத்தில் இதை பயன்படுத்தக் கூடாது. மற்ற நேரங்களில் பயன்படுத்தி சாதாரண தண்ணீரில் அலசினால் போதும். இது அந்த அளவிற்கு நுரை வராது ஆனால் தலை முடியின் வேர்களுக்கு ஈரப்பதத்தை கொடுத்து, அதில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மீண்டும் புதிய முடியை வளரச் செய்ய கூடிய அற்புதமான சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது, நீங்களும் ட்ரை பண்ணி பயனடையுங்கள்.

- Advertisement -