இரட்டிப்பு லாபம் பெற உங்கள் தொழிலுக்கு உரிய நவதானியத்தை இப்படி தானம் செய்யுங்கள்!

navadhaniyam-dhanam
- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவகிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ? அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவதானியங்கள் குறிப்பிட்ட கிழமையில் பூஜைகளின் பொழுது அந்தந்த கிரகத்திற்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. எந்த நாளில்? எந்த நவதானியத்தை? எந்த கிரகத்திற்கு படைத்து? வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wheat

சூரியன்:
வேலை தேடுபவர்கள், அரசு வேலை தேடுபவர்கள், ஆண் குழந்தை வேண்டுபவர்கள், அரசியல் மற்றும் தொழில் சார்ந்த பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், வம்சா வழியாக தொழில் செய்து வருபவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவானுக்கு உரிய தானியமாக இருக்கும் கோதுமையை தானம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும். ஞாயிறு அன்று கோதுமையால் செய்த உணவுகளை வைத்து சூரிய பகவானை வழிபடலாம்.

- Advertisement -

சந்திரன்:
ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றிருந்தால், திங்கள் கிழமைகளில் நவ தானியத்தில் பச்சரிசியை தானம் செய்து வரலாம். சந்திரனுக்கு உரிய தானியம் பச்சரிசி தான். வாகன ரீதியான தொழில் செய்பவர்கள் அல்லது வாகனங்களில் தொழில் செய்பவர்கள் கவிதை, கதை, இலக்கியம் தொடர்பான பணிபுரிபவர்கள், வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்கள், உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள் சந்திர பகவானை வழிபட்டு திங்கட்கிழமையில் பச்சரிசியை தானமாக வழங்கலாம்.

செவ்வாய்:
செவ்வாய் பகவானுக்கு உகந்த தானியம் துவரை ஆகும். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், உணவு சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், விளையாட்டு சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், கட்டிடத் தொழில் செய்பவர்கள், வீடு மனை தொடர்பான தொழில் செய்பவர்கள், விவசாய இயந்திரங்கள் தயார் செய்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவானை வேண்டிக் கொண்டு இயன்றவரை துவரையை தானமாக வழங்கி வரலாம். இதனால் மிகப்பெரிய நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். தொழில் விருத்தி அடையும் என்பது ஐதீகம்.

- Advertisement -

புதன்:
அழகு சார்ந்த தொழில் துறையில் இருப்பவர்கள், கல்வி, எழுத்து, கமிஷன், மளிகை, ஏஜென்சி, தரகு, கணக்கு, வங்கி சார்ந்த தொழில் துறையில் பணிபுரிபவர்கள் புதன் பகவானை வழிபாடு செய்து புதன் பகவானுக்கு உரிய நவ தானியத்தில் ஒன்றான பச்சைப் பயறை இயன்றவரை மற்றவர்களுக்கு தானம் செய்து வந்தால் தொழில் வளம் சிறக்கும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் புதன் நீசம் பெற்றிருந்தால் புதன் கிழமையில் பச்சைபயறு தானம் செய்வது சிறந்த பலனை தரும்.

pachai_payaru

குரு:
குழந்தை வரம் வேண்டுவோர், திருமண சுப காரியம் கைகூட, வேலை, தொழில், கல்வி போன்ற அனைத்திற்கும் குரு பகவானை வழிபட நன்மைகள் உண்டாகும். குறிப்பாக உபன்யாசம், உபதேசம், வட்டி, அடகு, பைனான்ஸ், கிளப், மருத்துவம், சட்டம், கல்வி, வங்கி போன்றவற்றுடன் தொடர்புடைய பணிபுரிபவர்கள், பேச்சைத் தொழிலாகக் கொண்டவர்கள் வியாழன் கிழமை தோறும் குரு பகவானுக்கு உரிய தானியமாக விளங்கும் கொண்டைக்கடலையை தானமாக வழங்கி வரலாம்.

- Advertisement -

Kondai Kadalai

சுக்கிரன்:
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர பகவானை வழிபட்டு மொச்சை தானியத்தை தானமாக வழங்கி வரலாம். ஆடை, ஆபரணம், நகை, அழகு போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களை தொழிலாக செய்பவர்கள் வெள்ளிக்கிழமையில் மொச்சையை தானமாக வழங்கி வந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

mochai

சனி:
இது நாம் அனைவரும் அறிந்தது தான். சனி பகவானுக்கு உரிய தானியமாக கருப்பு எள் இருக்கிறது. சனி ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிரச்சனைகளை உண்டு பண்ணுவார். அதில் ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் வரக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு சனிக்கிழமை தோறும் எள் அல்லது எள் கலந்த உணவுகளை தானமாக வழங்கி வருவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். உடல் உழைப்பை அதிகம் கொடுக்கும் உழைப்பாளிகள், தோல், காலணி, இரும்பு, பழைய பொருட்கள், சட்டம், கால்நடை, சாலை தொடர்பான விஷயங்களை தொழிலாகக் கொண்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் எள் கலந்த உணவை காகத்திற்கு சனிக்கிழமைகளில் வைத்து வர நிறைய பலன்களைத் தரும். எள் தானம் செய்து வந்தால் எந்த துன்பமும் உங்களை நெருங்காது.

ellu 1-compressed

ராகு:
நவ தானியத்தில் உளுந்து ராகு பகவானுக்கு உகந்த தானியம் ஆகும். ராகு தோஷம் கொண்டவர்கள், வெளிநாடு சார்ந்த தொழில் செய்பவர்கள், சூது, மது, இறைச்சி, தோல் போன்றவை தொடர்புடைய விஷயங்களில் பணிபுரிபவர்கள், ட்ரான்ஸ்போர்ட், சூப்பர் மார்க்கெட் போன்ற தொழில் செய்பவர்கள் சனிக்கிழமை அன்று ராகு பகவானுக்கு உரிய உளுந்தை அல்லது உளுந்து கொண்டு செய்த உணவை தானமாக வழங்கி வருவதால் ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

ulunthu

கேது:
ஜாதகத்தில் கேது நீசம் பெற்றிருந்தால் கேது பகவானுக்கு உரிய தானியமாக இருக்கும் கொள்ளு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் செய்து வரலாம். மேலும் ஆன்மீகம், ஜோதிடம், புரோகிதம், தரகு, தூதரகம், துப்புரவு, டிடெக்டிவ் தொடர்பான பல விஷயங்களில் தொழில் செய்பவர்கள் நிம்மதியான வாழ்வு கிடைக்க செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வேண்டிக் கொண்டு கொள்ளு தானம் செய்து வருவது நல்லது.

இதையும் படிக்கலாமே
எல்லாரையும் வயிறு குழுங்க சிரிக்க வைக்க எந்த ராசிக்காரர்களால் முடியும்? நீங்களும் இந்த ராசியில் ஒருவரான்னு தெரிஞ்சிக்கனுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -