பெண்கள் இந்த 1 செயலை செய்தால் வீட்டில் நவகிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் தெரியுமா?

om-water-bucktet

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் கலை மகளாகவும், மகாலட்சுமி ஆகவும் போற்றப்படுகிறாள். ஆண் இல்லாத வீட்டில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. பெண்கள் இல்லாத வீடு எப்படி இருக்கும்? என்று பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். அத்தகைய பெண்கள் குடும்பத்தின் பாதிப்புகளை குறைக்க பல வகையிலும் முயற்சி செய்கின்றாள். அவ்வகையில் நவகிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பெண்கள் இப்படி தினமும் செய்து வரலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

navagragaml

தனிப்பட்ட நபர்களின் தோஷம் அன்றி வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சுய ஜாதகத்தில் தோஷங்கள் எனப்படும் துன்பங்கள் இருக்கும். சிலர் சொல்ல கேட்டிருப்போம், ஒருவருக்கு ஏற்படும் தோஷம் அவரின் தந்தை, தாய்மாமன் என்று அவரை சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்று. இதை குடும்ப தோஷம் எனலாம். இவ்வகையான தோஷங்கள் நீங்க பரிகாரங்கள் சொல்லப்படும். அதோடு இவற்றின் பாதிப்புகள் குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் நோக்கிலான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கங்கையின் ஆசீர்வாதம் பெறுவது மிக மிக நல்லது.

கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது நியதி. நவகிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும், கங்கை அருள் கொடுக்கிறாள். கங்கைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இப்படி செய்யலாம். ஆண்களும் இதை செய்யலாம். குறிப்பாக பெண்கள் செய்வதால் மிகுந்த நன்மைகள் நடைபெறும்.

kasi

வீட்டில் தினமும் குளிக்கும் போது குளிக்கும் தண்ணீரில், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதி விட்டு, பின்னர் ‘ஓம் ஓம் ஓம்’ என்று மூன்று முறை உச்சரித்து விட்டு பின்னர் அந்த நீரை உடம்பில் ஊற்றிக் கொண்டால் சாதாரண தண்ணீர் கூட கங்கா ஜலமாக மாறக்கூடும். கங்கையில் குளித்த புண்ணியமும் கிடக்கும்.

- Advertisement -

இதை ஒரு நாள், இரண்டு நாள் செய்வதல்ல. தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து குளிப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம். பாவங்கள் நீங்க நீங்க தோஷங்களின் ஆற்றலும் குறைந்து கொண்டே வரும். இதை பெண்கள் செய்வதால் அவர்களுடைய தனி ஜாதக தோஷம் மட்டுமல்லாமல், குடும்பத்தினரின் தோஷங்களும் நீங்கும் என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம்.

bathroom-shower

பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்களை மட்டும் அல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரையும் சேரும் என்பது தான் நியதி. அவர்களிடத்தில் இருக்கும் நல்லவர்வைகளும், தீயவைகளும் அந்தக் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும். அந்தப் பெண் பிறந்த வீட்டில் இருக்கும் பொழுது பெற்றோர்களுக்கும், திருமணமான பின்பு புகுந்த வீட்டில் இருக்கும் அந்த குடும்பத்திற்கும் இவைகள் சாரும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

om-mantra

‘ஓம்’ என்னும் பிரணவம் தண்ணீரில் சேரும் பொழுது, தண்ணீர் கங்கையின் புனிதத்தை பெற்று விடுகிறது. இவைகள் நம் முன்னோர்கள் விசேஷ காலங்களில் செய்வது வழக்கம். கங்கையில் நீராட முடியாதவர்கள் இது போல் வீட்டில் செய்வார்கள். முக்கிய விசேஷ தினங்கள் மட்டும் அல்லாமல், தினமும் செய்வதால் நவகிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அந்த குடும்பத்தின் நன்மைக்காக ஒவ்வொரு பெண்களும் இவ்வாறு செய்தால் வீட்டில் சுபீட்சம் நிலைக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பூஜை அது? நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்