இந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பூஜை அது? நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா!

pithru-kuladheivam

பொதுவாகவே பூஜை, புனஸ்காரங்கள் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான். பூஜைகள் செய்யும் பொழுது பாவத்தை நீக்கி புண்ணியத்தை வேண்டுவது சாஸ்திர நியதி. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் புண்ணியங்கள் கிடைத்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும். முன்னோர்கள் செய்த புண்ணியம், பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று வழிவழியாக பிள்ளைகளுக்கு வந்து சேரும். புண்ணியம் மட்டுமல்ல, பாவங்கள் செய்தாலும் அப்படி தான். இந்த பூஜை மட்டும் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியங்கள் வந்து சேர்ந்து விடுமாம். அது என்ன பூஜை? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pooja-room

நீங்கள் உங்கள் தலைமுறையினருக்கு சொத்துக்கள் சேர்ப்பதை விட, புண்ணியத்தை சேர்த்து விட்டு சென்றால் போதுமானது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிட சிறந்த சொத்து எதுவுமே இருக்க முடியாது. பாவத்தை சேர்த்து விட்டு சென்றால், உங்களுடைய சந்ததிகள் ஒரு பாவமும் செய்யாமல் அதனுடைய துர் பலன்களை அனுபவிக்க நேரும். புண்ணியத்தை சேர்த்து விட்டு சென்றால், சந்ததிகள் நல்ல பலன்களை அனுபவிக்கும் பொழுது உங்களையும் நினைத்துக் கொள்வார்கள். இதனால் அடுத்த பிறவியே இல்லாமல் உங்களுக்கு மோட்சம் கிடைக்கப்பெறும்.

இல்லை என்றால் செய்த பாவத்திற்கு மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து தண்டனைகளை கழிக்க வேண்டியது தான். வேறு வழியே இல்லை. ஒருவர் அன்னதானம் செய்தால் மூன்று தலைமுறை வரை அதனுடைய புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். தெரிந்தோ! தெரியாமலோ! யாருக்கோ நீங்கள் போடும் ஒரு வேளை சாப்பாடு மூன்று தலைமுறைகள் வரை வாழ வைக்கும் என்றால் எவ்வளவு வியப்பிற்குரியது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

dead-death

ஒருவர் அனாதையாக இறந்து விட்டார் என்றால் அவருக்கு அந்திமக் காரியங்கள் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியே அவர்கள் அழிந்து விட்டால் அந்த பாவமானது அவர்களுடைய சந்ததியை சேரும். அப்படிப்பட்ட ஒருவருக்கு நீங்கள் அந்திம காரியங்களை செய்து மோட்சத்திற்கு அனுப்பி வைத்தால் அதற்குரிய புண்ணியமாக ஒன்பது தலைமுறைகள் வரை உங்களுக்கு சொத்துக்கள் சேரும். நல்ல வாழ்வு கிடைக்கப் பெறும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாக கோவில்களில் தீபம் ஏற்றுவது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கோவில்களில் தீபம் ஏற்றுபவர்களுக்கு அடுத்த ஐந்து தலைமுறையினர் வரை அதற்குரிய புண்ணியங்களை அனுபவிப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஏற்றும் ஆயிரம் விளக்குகளை விட, திருக்கோவிலில் ஏற்றும் ஒரே ஒரு தீபம் ஆனது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு அகல் தீபமாவது இனி ஏற்றி வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

vilakku2

பட்டினியால் வாடும் ஏழை மனிதர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். அது மட்டுமல்லாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பெண்ணுக்கு திருமண உதவி செய்தாலும் புண்ணியங்கள் உண்டு. இந்த புண்ணிய காரியங்களுக்கு உங்களுடைய ஐந்து தலைமுறைகள் வரை நல்ல விஷயங்களை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு வரும் துன்பங்கள் யாவும் தவிடு பொடியாகும்.

banana-for-cow

பசுவை கோமாதாவாகவும், தெய்வமாகவும் மதித்து வணங்கும் இந்து மத சமுதாயத்தில் பசுக்களின் உயிரைக் காப்பதால் 14 தலைமுறைகள் வரை பெரும் புண்ணியம் வந்து சேரும். தெரிந்தோ, தெரியாமலோ பசுவின் உயிரை நீங்கள் காப்பாற்றும்படி சூழ்நிலை ஏற்பட்டால் அதை விட சிறந்ததொரு பரிகாரம் இவ்வுலகில் இல்லை.

pithru dhosam

நமக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் வருவது நம்முடைய பித்ருக்களும், குலதெய்வமும் தான். பித்ருக்களுக்கு செய்யும் பூஜை ஆறு தலைமுறைகள் வரை புண்ணியத்தை சேர்க்கும். அதிலும் குறிப்பாக பித்ருக்களின் திதி பூஜை தவறாமல் செய்பவர்களுக்கு 21 தலைமுறைகள் வரை புண்ணியங்கள் சேர்க்குமாம். ஆகவே நீங்கள் வருடம் தோறும் உங்கள் முன்னோர்கள் இறந்த திதி அன்று திதி கொடுத்து வந்தாலே இருக்கின்ற அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, அடுத்த அடுத்த தலைமுறையினரும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே
தொடர் கஷ்டங்களுக்கு இந்த சாபமும் காரணமாக இருக்கலாம்! சாபம் நீங்க எளிமையாக பரிகாரம் செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.