உங்களுடைய இந்த கஷ்டத்திற்கு இதுதான் காரணமா? தெரிந்து கொண்டு இதை செய்யுங்கள்! துன்பம் எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்.

vinayagar-navagragam

நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் இந்தப் பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்பது கோள்கள் தான். இந்த ஒன்பது கோளும் நவகிரகங்களாக இருந்து நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின் பொழுதும் நம்முடைய சுய ஜாதகத்தை பார்த்தால்! அதற்குரிய பலன்களை தெரிந்து கொள்ளலாம். அவ்வகையில் நமக்கு எந்த கிரகத்தால் பிரச்சனை? என்பதை தெரிந்து கொண்டால்! அதற்குரிய எளிய பரிகாரத்தை செய்து வர இருக்கும் துன்பத்தை அங்கேயே தடுத்து நிறுத்தி விடலாம். நவ கிரகங்களுக்கு உரிய எளிய பரிகாரங்கள் என்ன? இதைதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Lord sooriyan

நவகிரகங்களில் சூரியன் முதலான கேது வரையிலான ஒன்பது கோள்களில் முதலாவதாக சூரியன் இருப்பதால் சூரிய கிரக தோஷம் இருப்பவர்கள் நவகிரக சன்னிதிக்கு சென்று சிவப்பு வஸ்திரம் சாற்றி, சூரிய மந்திரம் ஜெபித்து, அபிஷேகம் செய்து, செந்தாமரை மலர் சாற்றி, கற்பூர ஆராதனை காண்பித்தல் வேண்டும். இதனை ஞாயிற்றுக்கிழமை செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சந்திர கிரக தோஷம் இருப்பவர்கள் சந்திரனுக்கு உரிய வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அபிஷேகங்கள் செய்து, சந்திர மந்திரம் உச்சரித்து, வெள்ளை அரளி பூக்களால் அர்ச்சனை செய்து, கற்பூரம் காண்பித்து வழிபட்டு வந்தால், சகல தோஷங்களும் நீங்கும். இதனை திங்கட்கிழமை அன்று செய்வது நல்லது.

sevvai

செவ்வாய் பகவான் கொடுக்கக்கூடிய கெடுதல்களிலிருந்து தப்பிக்க, செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, அபிஷேகங்கள் செய்த பின்னர், சிவப்பு பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து, அங்காரக மந்திரங்கள் ஜபித்தால், தோஷங்கள் விலகி நன்மைகள் நடைபெறும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் கட்டாயம் இதை செய்து கொள்வது நல்லது. செவ்வாய்க் கிழமையில் இதனை செய்வது உத்தமம்.

- Advertisement -

புதன் பகவானுக்கு உரிய வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, நவக்கிரக சந்நிதியில் கற்பூர ஆரத்தி காண்பித்து, முறையாக மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வந்தால், புத கிரக தோஷம் நீங்கி நல்வாழ்வு பிறக்கும். இதனை புதன்கிழமை செய்வது நல்லது.

guru-bhagavan

குரு பகவான் கொடுக்கக்கூடிய நன்மைகளைப் பெறுவதற்கு, குரு தோஷம் நீங்க, மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து, முல்லை பூக்களால் அர்ச்சனை செய்து, குரு மந்திரங்களை உச்சரித்து, தீப ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும் இதனை வியாழக்கிழமையில் செய்ய வேண்டும். இதனால் குருவால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, அவரால் வரக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும்.

சுக்ர பகவான் தோஷம் இருப்பவர்கள் நவகிரக சன்னதிக்கு சென்று சுக்கிரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெள்ளை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து, சுக்ரனுக்கு உரிய மந்திரங்கள் ஜபித்து, வெள்ளிக்கிழமையில் தூப தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

sani-baghavan

சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்க நவக்கிரக சன்னிதியில் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து, கருங்குவளை அல்லது நீலோற்பலம் என்கிற பூக்களால் அர்ச்சனை செய்து, சனி பகவான் மந்திரங்களை உச்சரித்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும். இதனை சனிக்கிழமைகளில் செய்வது உத்தமம்.

ராகு தோஷம் நீங்க ராகுவிற்கு, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து, இலுப்பை மர பூ நீல மந்தாரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அர்ச்சனை செய்து, ராகு பகவான் உடைய மந்திரங்கள் உச்சரித்து, கற்பூரம் ஏற்றி வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி, சகலமும் வசமாகும். ராகு மற்றும் கேது தோஷம் நீங்க எந்த கிழமையிலும் வழிபடலாம்.

ragu-rahu-dasa

கேது தோஷம் நீங்க செவ்வல்லி மலர் கொண்டு அர்ச்சனை செய்து, அபிஷேகங்கள் செய்து, பல வர்ணங்களால் ஆன வஸ்திரம் சாற்றி, அவருக்கு உரிய மந்திரங்களை ஜெபித்து, கற்பூரம் வைத்து வழிபட வேண்டும். இதனால் கேது தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் வரும் கெடுபலன்கள் நீங்கும் என்பது ஐதீகம். இப்படியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான எளிய பரிகாரம் செய்தாலே வாழ்க்கையில் பிரச்சனையை வர விடாமல் தடுத்து விடலாம். வந்தாலும் அதனை எதிர்த்து சுலபமாக போராடலாம்.