இந்த 5 எண்ணெயில் இப்படி தீபமேற்றினால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தலைகீழாக மாறி அதிர்ஷ்டம் பெருகும்!

navagraham-vilakku
- Advertisement -

ஒரு மனிதனுக்கு கஷ்டம் வருவது அவனுடைய ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள் தான் காரணம் என்கிறது ஜோதிடம். கிரக அமைப்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது அவரவர் செய்த பூர்வ கர்ம வினைப்படி அமைந்திருக்கும். நவகிரஹங்கள் தான் இதனை இயக்குகின்றன. இந்த நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் நீங்கி அதிர்ஷ்ட மழை பொழியும். நவக்கிரக சன்னிதியில் எப்படி விளக்கேற்ற வேண்டும்? என்கிற சூட்சமத்தை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

navagraham

பொதுவாக ஒன்பது கிரகங்கள் சேர்ந்தது தான் ஜாதக அமைப்பு. ஒன்பது கிரகங்களுக்கும் ஒன்பது விதமான விளக்குகள் தனித் தனியாக ஏற்ற வேண்டுமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அல்லது எல்லா கிரகத்திற்கும் ஒரே தீபத்தை ஏற்றினால் பலன் தருமா? என்கிற கேள்வியும் எழும். ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் சேர்த்து ஒரே விளக்கை ஏற்றி பலன் பெற முடியும். அது என்ன விளக்கு?

- Advertisement -

ஒன்பது கிரகங்களுக்கும் ஒன்பது விதமான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி அல்ல. நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் மட்டுமே சுப கிரகமாக விளங்குகின்றன. மற்ற அத்தனை கிரகங்களும் அசுபக் கிரகங்கள் ஆக கருதப்படுகிறது. சுப கிரகங்கள் பலம் பெற்றால் அசுப கிரகங்கள் மூலம் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தீரும். எனவே ஐந்து விதமான எண்ணெய்களை கொண்டு ஐந்து விதமான சுப கிரகங்களுக்கு இப்படி விளக்கேற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்களும் விலகும் என்பது நியதி. அதை எப்படி ஏற்ற வேண்டும்?

Mooligai ennai

நெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களும் சேர்ந்தது தான் பஞ்ச தீப எண்ணெய் என்று கூறப்படும். ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு எண்ணெய் உகந்ததாக இருக்கும். இந்த ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே அளவுகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தனியாக ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயைக் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கில் எக்காரணம் கொண்டும் ஒரு எண்ணெயுடன் கலந்து இன்னொரு எண்ணெயும் சேர்த்து தீபம் ஏற்றக் கூடாது. இது கோவில்களில் மட்டுமே செய்யக்கூடிய ஒரு பரிகாரமாக கருதப்படுகிறது. வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது சிறப்பு. பரிகாரத்திற்கு மற்ற எண்ணெய்களை தனியாக பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் எண்ணெய்களை கலந்து தீபம் ஏற்றக் கூடாது.

agal-vilakku-deepam

நவகிரக சன்னிதிக்கு சென்று அகல் விளக்கு ஒன்றில் நீங்கள் கலந்து வைத்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி அல்லது நூல் திரி இட்டு தீபம் ஏற்றி வைத்து உங்கள் பிரச்சனைகள் தீர நவ கிரகங்களுக்கும் சேர்த்து வேண்டி வணங்கிக் கொள்ள வேண்டும். இதை மாலை வேளைகளில் செய்வது மிகவும் விசேஷமானது. அல்லது காலையிலேயே சூரியன் உதிக்கும் பொழுது சென்று இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த தீபத்தை நீங்கள் ஏற்றி வந்தால் எத்தகைய கிரக தோஷங்களும் நீங்கி அதனால் வரக்கூடிய துன்பங்களும் விலகி அதிர்ஷ்டம் பெருகும்.

- Advertisement -